Tuesday, 12 August 2014

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்:

தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல்
தும்பை இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்
செய்முறை :-
சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும்.
மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.

Wednesday, 6 August 2014

மண்புழு மன்னாரு (பசுமை விகடன்)

மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும்.
தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம்.
சீமைக் கருவேல், வேலிக்காத்தான், ஆபீஸ் முள்னு பல பேர்ல சொல்லப்படற முள்ளுச்செடி நம்ம ஊர்ல எங்க பாத்தாலும் வளந்து கிடக்கும். இதோட காய்ங்க கால்நடைக்கு அருமையான தீவனம். முதிர்ந்த காய்ங்க பளபளனு மஞ்சள் நிறத்துல இருக்கும். அதை சேகரிச்சி தினமும் அரை கிலோ வீதம் பால் மாட்டுக்கு கொடுத்து வந்தா, அதிகமா பால் கிடைக்கும். மாடும் நல்ல கொழுகொழுனு இருக்கும்.
வெண்டைச் செடிக்கு சத்துப் பற்றாக்குறை வந்துச்சுன்னா, வெள்ளை வெளேர்ன்னு வெளுத்துடும். இதை சரி செய்யவும் சீமைக் கருவேல்தான் உதவி செய்யுதுங்க. அரை லிட்டர் சீமைக் கருவேல் இலைச்சாறை பத்து லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சா வெண்டைச் செடி பசுமையா மாறிடும். காயும் சும்மா பச்சை பசேல்னு இருக்கும்.
மிளகாச் செடிய அடிக்கடி சாம்பல் நோய் தாக்கும். இதைத் தடுக்கவும் சீமைக் கருவேல் கைக் கொடுக்குதுங்க. பத்து லிட்டர் தண்ணியில அரைலிட்டர் சீமைக் கருவேல் சாறைக் கலந்து தெளிக்கலாம். இப்படி செஞ்சா இலைப் புள்ளி நோயும் வராது. மிளகாச் செடியும் பச்சை, பசேல்னு இருக்கும்.
நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு.
மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.

Sunday, 13 July 2014

அமிர்த்த கரைசல்:

தயாரிப்பு முறை: மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம்?இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார். ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம். (தகவல்: இயற்கை வேளாண்மை, அ முதல் ஃ வரை, பொன்.செந்தில்குமார்)

Monday, 7 July 2014

மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு

மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு
வெற்றிலை, மிளகு, மஞ்சணத்தி இலை தின்னக் கொடுக்க வேண்டும். பிரண்டை ஒரு கை பிடியளவு எடுத்து இடித்து கல் உப்பை சேர்த்து நாவில் தேய்த்து பிரண்டை சாறு உள் கொடுக்க இரை தின்னும்
கழிச்சலுக்கு மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு
வெற்றிலை, மிளகு, மஞ்சணத்தி இலை தின்னக் கொடுக்க வேண்டும்.
பிரண்டை ஒரு கை பிடியளவு எடுத்து இடித்து கல் உப்பை சேர்த்து
நாவில் தேய்த்து பிரண்டை சாறு உள் கொடுக்க இரை தின்னும்
கழிச்சலுக்கு
அவரை இலை 1 பிடி, சின்ன வெங்காயம் 10 கிராம், விடத்தலை
இலை 1 பிடி ஆகிய அனைத்தும் அரைத்து (மாட்டு தொட்டியில்) கழனியில் கலந்து 2 வேளை உள்ளே கொடுக்க வேண்டும்.
மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு
வெற்றிலை, மிளகு, மஞ்சணத்தி இலை தின்னக் கொடுக்க வேண்டும்.
பிரண்டை ஒரு கை பிடியளவு எடுத்து இடித்து கல் உப்பை சேர்த்து
நாவில் தேய்த்து பிரண்டை சாறு உள் கொடுக்க இரை தின்னும்
கழிச்சலுக்கு
அவரை இலை 1 பிடி> சின்ன வெங்காயம் 10 கிராம், விடத்தலை
இலை 1 பிடி ஆகிய அனைத்தும் அரைத்து (மாட்டு தொட்டியில்) கழனியில் கலந்து 2 வேளை உள்ளே கொடுக்க வேண்டும்.
வயிறு ஊதி கொண்டால்
பெருமருந்து ( வசம்பு) மற்றும் தலை சுருளிக்கொடியை வாய்க்குள் கொடுக்க ஊதிய வயிறு குறைந்து விடும் அல்லது முற்றிய வெற்றிலையுடன் பெருங்காயத்தைச் சேர்த்து, தட்டக்குச்சியில் மடித்து வாய்க்குள் கொடுக்க வயிறு ஊதிக் கொள்ளுதல் குறையும்.