Tuesday, 3 December 2013

Information of Goat farming




http://goatandsheepfarming.blogspot.in/
http://indiaboer.com/index.php
http://bestfoundation.co.in/
http://boerindia.com/
http://www.goatfarmdevelopers.com/
http://www.goatworld.com/
http://www.goatworld.com/breeds/beetal.shtml

http://agritech.tnau.ac.in/animal_husbandry/ani_goat_breeds%20of%20goat.html
http://www.agritech.tnau.ac.in/farm_enterprises/Farm%20enterprises_Goat%20rearing.html

http://livestock-poultry-financing.blogspot.in/search/label/Goat
http://farmnest.com/FarmNestWiki
http://farmnest.com/Farm+Fencing&structure=FarmNestWiki
http://agritech.tnau.ac.in/animal_husbandry/ani_goat_mgt%20practices.html
http://thachankurichymail.blogspot.in/2012/04/blog-post_1913.html

Re-Production:

http://www.dpi.vic.gov.au/agriculture/animals-and-livestock/goats/reproduction-management-of-fibre-and-meat-goats
http://www.greenfield-ngo.org/goatbreeding.html
http://www.buttercupsoaps.com/GATG-101.html
http://www.goatwisdom.com/index.html#topics
http://www.kansasboergoats.com/

Kids Care :

http://www.howtodothings.com/pets-and-animals/a3359-how-to-care-for-and-feed-baby-goats.html

HandBooks and PDF :

http://www.esgpip.com/Handbook.html
http://www.snvworld.org/sites/www.snvworld.org/files/publications/goat_farming_as_a_business_-_a_farmers_manual.pdf
http://www.goatworld.com/articles/index.shtml
http://richfarmerpoorfarmer.blogspot.in/2011/09/non-farm-occupations-goat-farming.html
http://goatsinthegarden.blogspot.in/2009/03/dos-and-donts-of-buying-goats.html
http://www.sleepyzfarm.com/goateducation.html
http://www.amberwavespygmygoats.com/index.php?option=com_content&view=section&id=5&Itemid=73
http://ageconsearch.umn.edu/bitstream/47443/2/7-Shelanderkumar.pdf
http://www.docstoc.com/docs/84649409/Managing-Goat-Farming-Business

http://www.merckvetmanual.com/mvm/index.jsp
http://articles.submityourarticle.com/how-to-raise-goats-3-essential-facts-on-raising-goats-successfully-188826
http://www.animalcorner.co.uk/farm/goats/goat_reproduction.html
http://www.goatfarm.co.in/goat-farmiupdate/

Record Keeping :
http://www.esgpip.org/PDF/Technical%20bulletin%20No.30.pdf
http://www.extension.uidaho.edu/cassia/Permanent%20goat%20breeding%20insert.pdf
http://www.utextension.utk.edu/managecamp/goat%20record%20categories.pdf
http://goatandsheepfarming.blogspot.in/
http://www.esgpip.com/HandBook/Chapter13.html
http://edenhills.wordpress.com/2012/01/09/record-keeping-for-goats/

Magazine:

http://www.uky.edu/Ag/AnimalSciences/goats/goatsites.html
http://www.theboergoatmagazine.com/online-issue-july-aug-2011.html
http://www.theboergoatmagazine.com/online-issue-nov-dec-2011.html

Project Report:
http://www.odishavet.com/goa
http://allianceagro.com/pdfs/goat/ALLIANCE_AGRO-GOAT_FARM_PROJECT_REPORT_for_200.pdf

Cultivation:

http://www.ikisan.com/crop%20specific/eng/links/ap_cultivation.shtml

KVK:

http://www.tanuvas.ac.in/KVK_NMK.html

Agri University:

http://www.icar.org.in/files/agr-univ-for-ICAR-IFs.pdf

Breeds :

http://www.ansi.okstate.edu/breeds/goats/

Software:
http://ecofila.com/
http://www.lionedge.com/products/GoatFeatures.php
http://www.backyardherds.com/forum/viewtopic.php?id=22249
http://www.docstoc.com/docs/70729247/Fact-Sheet-Credit-Card-Companies---PowerPoint

Consultancy:

http://www.sheepandgoattraining.com/
http://thalasserygoat.com/

FaceBook:

https://www.facebook.com/pages/Al-FAHAD-GOAT-FARM/672182226128793
https://www.facebook.com/TurboIndiaGoatFarms
https://www.facebook.com/pages/A1-Goat-Farm/489100611157456

Sample Farm Income Statement

http://extension.psu.edu/courses/meat-goat/financial-information/farm-business-analysis/farm-income-statement-sample

Got Biolagy:
http://www.goatbiology.com/animations.html

கலக்கும் கறியாடு வளர்ப்பு..!





'அள்ளித் தரும் ஆடு வளர்ப்பு’ என்கிற தலைப்பில்... கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் மே 4-ம் தேதி 'பசுமை விகடன்’ சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது.

வீராணம் பாசன விவசாயிகள் சங்கம், அம்மன் ஆட்டுப்பண்ணை ஆகியவை இணைந்து நடத்திய அக்கருத்தரங்கு பற்றிய செய்தி, கடந்த இதழில் இடம்பிடித்தது. அங்கே பகிரப்பட்ட தொழில்நுட்பங்கள் இந்த இதழில் இடம்பிடிக்கின்றன.
'ஆடு வளர்ப்பில் நவீனத் தொழில்நுட்பம்’ என்கிற தலைப்பில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியரும், தேனி மாவட்ட உழவர் பயிற்சி மையத்தின் தலைவருமான பீர்முகமது பேசினார்.
''ஆடு, மாடுகளை ஒரு காலத்தில் மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்தார்கள். தற்போது, மேய்ச்சல் நிலங்கள் அழிந்து கொண்டே வருவதால், கொட்டில் முறையில் வளர்க்கிறார்கள்.
கிட்டத்தட்ட கொட்டில் முறையைத்தான், 'நவீன முறை’ என்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. உதாரணமாக, கொட்டில் முறையில்

100 ஆடுகள் வளர்ப்பதாக இருந்தால், குறைந்தது மூன்றரை ஏக்கர் நிலம் வேண்டும். அப்போதுதான் போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், ஒரு ஏக்கர் நிலத்தில்
500 ஆடுகள் வரை வளர்க்கும் அதிநவீன 'ஹைட்ரோபோனிக் ஃபாடர் புரொடக்ஷன்’ என்கிற தொழில்நுட்பம் சில நாடுகளில் அறிமுகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டில்கூட ஒன்றிரண்டு பண்ணையாளர்கள் அந்த முறைக்கு மாறியுள்ளார்கள்.
குறைந்த இடத்தில் அதிக தீவனம்!
அது என்ன 'ஹைட்ரோபோனிக்’ முறை..? வேறொன்றும் இல்லை. கிராமங்களில் திருவிழா சமயங்களில் நவதானியங்களைப் போட்டு முளைப்பாரி செய்வார்களே அதே தொழில்நுட்பம்தான்.
சின்னப்பானைகளில் முளைப்பாரி போடுவது போல, பெரிய பெரிய 'பிளாஸ்டிக் டிரே’க்களில் பயிரை முளைக்க வைக்கும் தொழில்நுட்பத்தைத்தான் 'ஹைட்ரோபோனிக் ஃபாடர் புரொடக்ஷன்’ என்கிறார்கள். கப்பல்களில் சரக்குகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தும் கண்டெய்னர் போல உள்ள ஒரு அமைப்பில், டிரேக்களை அடுக்கி வைக்க வசதியாக இரும்புக் கம்பிகளை அமைத்து இருப்பார்கள்.

ஒவ்வொரு டிரேக்கும் இடையே ஒன்றரை அடி இடைவெளி இருக்கும். உள்ளே குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். டிரேக்களில் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கப்பட்ட மக்காசோள விதையைத் தூவி, வரிசையாக டிரேக்களை அடுக்கி வைத்து, குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரித்தால், 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் மக்காசோளம் பயிராக வளர்ந்து விடுகிறது. அதை அப்படியே எடுத்து ஆடுகளுக்குக் கொடுக்கிறார்கள். ஒற்றை நாற்று நடவுக்கு நெல் நாற்றை பாய் நாற்றாங்காலில் சுருட்டி எடுத்து வருவது போல, இந்தப் பயிரை எடுத்து வெட்டாமல், அப்படியே ஆடுகளுக்குக் கொடுக்கிறார்கள்.
இந்த முறையில் பத்து கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய, ஒன்றேகால் கிலோ விதை போதுமானது. சாதாரண புல்லைவிட, இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் தீவனத்தில் 6% புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. காலை, மாலை இருவேளையும் இந்தத் தீவனத்தைக் கொடுத்து, மதியம் உலர் தீவனத்தை கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் 10 கிராம் தாது உப்புக்கலவையைக் கொடுக்கிறார்கள். இதனால், ஆடுகளின் வளர்ச்சி அபாரமாக இருக்கிறது. இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் தீவனம் வளர்க்க ஒரு யூனிட்டுக்கு (ஒரு கண்டெயினர்) 18 முதல் 20 லட்ச ரூபாய் வரை செலவாகும். ஆனால், இதே தொழில்நுட்பத்தை கன்டெய்னருக்கு பதிலாக பாலி ஹவுஸ் மற்றும் காற்றுப் புகாத அறைகளில்கூட முயற்சி செய்யலாம்.
இப்படிச் செய்வதன் மூலமாக குறைந்த செலவில் அதிக தீவனத்தை உற்பத்திச் செய்யலாம்'' என்ற பீர்முகமது, அடுத்ததாக, 'பிராய்லர் கோட்’ எனப்படும், கறியாடு வளர்ப்பு முறை பற்றி சொன்னார்.
கறியாடு வளர்ப்பு!
பிராய்லர் கோட் வளர்ப்பு தமிழகத்தில் இன்னும் பிரபலமாகவில்லை. ஆனால், கேரளாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இந்த முறையில் ஆடுகளை வளர்த்து வருகிறார்கள். இதற்கு அதிக செலவு செய்ய வேண்டியதில்லை.
ஆடுகள் வெளியே போகாத அளவுக்கு படல், வலை, வேலி ஆகியவற்றில் ஏதாவதொன்றை அமைத்தாலே போதும். அருகில் உள்ள கிராமங்களில் கூடும் சந்தைகளில் கிடைக்கும் பால் குடி மறந்த நிலையிலுள்ள 80 நாள் வயதுள்ள வெள்ளாட்டுக் கிடாய் குட்டிகளை வாங்க வேண்டும்.
குட்டிகளைப் பண்ணைக்குக் கொண்டு வந்தவுடன் விரை நீக்கம் செய்ய வேண்டும். குட்டிகள் என்பதால், குறைவான தீவனங்களைத்தான் உட்கொள்ளும். அதனால், குறைவான இடத்தில் பசுந்தீவனங்களை வளர்த்தாலே போதுமானது.
மூன்று மாதம் வயதுள்ள குட்டிக்கு ஒரு நாளைக்கு முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ வரையும்; 3 முதல் 6 மாதம் வயதுடைய குட்டிக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரையும்; 6 மாதம் முதல் 9 மாதம் வரை வயதுடைய குட்டிக்கு இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரையும் பசுந்தீவனம் தேவைப்படும்.

குட்டிகளை ஆறு மாதம் வரை வளர்த்து, அதாவது குட்டிகளுக்கு 9 மாத வயதில், விற்பனை செய்து விட வேண்டும். கறிக்காக வளர்க்கும்போது அதிக பராமரிப்பு தேவைப்படாது. கறிக்காக 9 மாத வயதுள்ள ஆடுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த வயதுள்ள ஆடுகளின் கறிதான் சுவையானதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். ஆனால், பெரும்பாலான இடங்களில் ஐந்து மாத குட்டிகளைக்கூட அறுக்கிறார்கள். அது தவறு. அந்த வயதுள்ள குட்டிகளின் கறியில் சுவையோ சத்தோ இருக்காது'' என்றவர் கறியாடு வளர்ப்பின் மூலமாக கிடைக்கும் வருமானத்தைப் பற்றிச் சொன்னதும், வியப்பில் விழிகளை விரித்தனர், விவசாயிகள்.
மாதம் 56 ஆயிரம்!
''80 நாள் வயதுடைய குட்டியை 2 ஆயிரம் ரூபாய் விலையில் வாங்கலாம். அதை அடுத்த ஆறு மாதங்கள் வளர்ப்பதற்கு அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் செலவாகும். மொத்தம் 4 ஆயிரம் ரூபாய் செலவு.
9 மாத வயது ஆடு, குறைந்தபட்சம் 25 கிலோ எடை இருக்கும். உயிரோடு இருக்கும் ஓர் ஆட்டின், இன்றைய குறைந்தபட்ச பண்ணை விலை கிலோவுக்கு 250 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், 6 ஆயிரத்து 250 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் செலவுத் தொகையை கழித்து விட்டால், ஒரு ஆடு மூலமாக 2 ஆயிரத்து 250 ரூபாய் லாபம்.
இந்த முறையில் 25 குட்டிகளை வாங்கி வளர்த்தால், 56 ஆயிரத்து 250 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். சுழற்சி முறையில் மாதம் 25 குட்டிகள் என வாங்கி வளர்த்தால், தொடர்ச்சியாக மாதாமாதம் வருமானம் கிடைக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் இந்த முறை வளர்ப்பில் ஈடுபடலாம்.
தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா ஆடுகளில் பெட்டைக்குட்டிகளை வைத்துக் கொண்டு, கிடாய் குட்டிகளை விற்று விடுகிறார்கள். அவர்களிடம் கூட கிடாய் குட்டிகளை சுலபமாக வாங்க முடியும். ஆடுகளைப் பொருத்தவரை விற்பனைக்குப் பிரச்னையே இல்லை. வியாபாரிகள் தேடி வந்து பிடித்துக் கொள்வார்கள்'' என்று சொன்னார்.
தொடர்ந்து ஆடு வளர்ப்பில் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றிப் பேசிய அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமையாளர் சதாசிவம், ''வெள்ளாடுகள், பனி, மழை, வறட்சினு எல்லா காலத்துக்கும் ஒத்துப்போகும். ஒரு இடத்துல இருந்து அடுத்த இடத்துக்கு மாத்துனாலும், பத்து நாள் ஒழுங்கா பராமரிச்சாலே, அந்த இடத்துக்கு தக்க மாதிரி மாறிக்கும். விவசாயத்தை மட்டும் பாத்தா... பல நேரத்துல நட்டம்தான் வரும். விவசாயத்தோட சேர்த்து ஆடு, மாடுகள வளர்த்தா நிச்சயம் நட்டம் வராது.
ஒரு ஏக்கர் நிலத்துல வாழை போட்டா... ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். அதே ஒரு ஏக்கர்ல தீவனத்தை உற்பத்தி செஞ்சி அம்பது ஆடுகளை வளத்தோம்னா வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் பாக்கலாம்.
பண்ணைக்கு டாக்டர் வரக்கூடாது!
பெரும்பாலான ஆட்டுப்பண்ணைகள் ஜெயிக்காமப் போறதுக்கு காரணம் பண்ணையாளர்களோட நேரடிப்பார்வை இல்லாததுதான். 'பணத்தைப் போட்டு பண்ணையை ஆரம்பிச்சா போதும், வருமானம் வந்துடும்’னு நினைக்கறாங்க. அது ரொம்ப தப்பு.
என்னதான் வேலைக்கு ஆளுங்கள வெச்சிருந்தாலும் நாமளும், தினமும் பண்ணையைப் பார்வையிடணும். 'நாம பண்ணைக்குப் போக முடியாது’னு நினைச்சா... நிச்சயம் ஆடு வளப்புல இறங்காதீங்க. கண்டிப்பா நஷ்டமாகிடும். பண்ணையை சுத்தமா வெச்சுக்கிட்டாலே, பாதி பிரச்னை தீர்ந்துடும். ஒரு வெற்றிகரமான பண்ணைக்கு டாக்டர் வரக்கூடாது. அந்தளவுக்கு பராமரிப்பு இருக்கணும்.
கொட்டில் முறையில, தரையிலிருந்து கொட்டிலோட உயரம் கம்மியா இருந்தா... கீழ புழுக்கையில இருந்து வர்ற மீத்தேன் வாயுவால பிரச்னை வரும். அதனால, கொட்டில் உயரமாத்தான் இருக்கணும். நாலஞ்சு நாட்டுக்கோழிகளை வாங்கி விட்டா, கீழ விழுற புழுக்கையைக் கிளறி, காத்தோட்டமாக்கிடும்.

ஆடுகள், காதை சுவத்துலயோ, வாயிலயோ சொறிஞ்சா, காதுகள்ல முடியில்லாத இடத்துல உண்ணிப் பூச்சி இருக்குனு அர்த்தம். அதைப் பாத்து, துடைச்சி எடுத்துடணும். இதுமாதிரி சின்னா விஷயங்கள்தான். ஆனா, சரியா செய்யணும்.
ஆடு வளக்கணும்னு நினைக்கிறவங்க, கொட்டகை போடுறதுக்கு முன்னயே, கோ-4, கோ-5, வேலிமசால், அகத்தி, குதிரைமசால், ஆப்ரிக்கன் டால் மக்காசோளம், கோ.எஃப்.எஸ்.-29...னு தீவன உற்பத்தியை ஆரம்பிச்சுடணும். தீவனம் இல்லாம ஆடுகளை வாங்கிட்டு வந்தா... நிச்சயம் அந்தப் பண்ணையை நடத்த முடியாது. 
அனுபவம் அவசியம்!
ஆடுகளுக்கு எந்த மாசம் என்ன தடுப்பூசி போடணும்? எப்போ என்ன மருந்து கொடுக்கணும்னு அட்டவணை போட்டு பண்ணையில தொங்க விடணும். அதைப் பாத்து அந்தந்த மாசம் செய்ய வேண்டியதைத் தவறாம செஞ்சாலே நோய்ங்க தாக்காது. அதேபோல நல்ல தரமான ஆடுகளைப் பார்த்து வாங்கணும்.
உங்களுக்கு நல்லா தெரிஞ்ச தரமான பண்ணைகள்ல இருந்து குட்டிகளை வாங்குங்க. வியாபாரிங்க சில நேரம் வயிறு முழுக்க தண்ணிய நிரப்பி ஆடுகளை போஷாக்கா காட்டி ஏமாத்தி வித்துடுவாங்க. அதனால, சந்தைகள்ல வாங்கும்போது, ரொம்ப கவனமா இருக்கணும்.
எந்த ஒரு தொழில்லயும் முன் அனுபவம் இல்லாம இறங்கக்கூடாதுனு சொல்வாங்க. ஆடு வளர்ப்புக்கும் அது பொருந்தும். அதனால புதுசா பண்ணை அமைக்கறவங்க, எடுத்தவுடனே அதிக எண்ணிக்கையில ஆடுகளை வாங்காதீங்க. 20 ஆடுக, ஒரு கிடாய் மட்டும் வாங்கி பண்ணையை ஆரம்பிங்க. அந்த இருபது ஆடுகள்லயும் சினை ஆடுக, பால் கொடுக்குற ஆடுக, பருவத்துக்கு வந்த ஆடுக, குட்டிகனு கலந்து வாங்கணும். அப்பத்தான் எல்லா வயசு ஆடுகள பத்தின அனுபவமும் கிடைக்கும். அனுபவம் வந்த பிறகு அதிக எண்ணிக்கையில ஆடுகள வளர்க்கலாம்'' என்ற சதாசிவம் நிறைவாக,
ஆண்டுக்கு 3 லட்சம் லாபம்!
''ஒரு பண்ணையில 50 ஆடுக இருக்கு. அதுல கிடாய் போக, 47 ஆடுக குட்டி போடுதுனு வெச்சுக்குவோம்.
ஒரு வயசு முடிந்த ஆடு, ரெண்டு வருஷத்துல மூணு தடவை குட்டிப் போடும். ஒவ்வொரு ஆடும் குறைந்தபட்சம் ஈத்துக்கு ரெண்டு குட்டி போடும். இந்தக் கணக்குப்படி 47 ஆடுக மூலமா 282 குட்டிக கிடைக்கும். சராசரியா 250 குட்டினு வெச்சுக்குவோம். அதை மூணு மாசம் வளர்த்து விக்கும்போது ஒரு குட்டி 3,500 ரூபாய்க்கு விக்கும்.
250 குட்டிக்கு, 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். வேலையாள் கூலி, பசுந்தீவனம், அடர்தீவனம், கரன்ட் பில், பராமரிப்பு எல்லா செலவும் சேர்த்து ரெண்டு லட்ச ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 6 லட்சத்து 75 ஆயிரம் லாபமா நிக்கும். இந்தக் கணக்குப்படி பார்த்தா வருஷத்துக்கு 3 லட்சத்து சொச்சம் லாபமா கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்துல இருந்து அதிகம் அலட்டிக்காம இந்த வருமானம் வேற எந்தத் தொழில்ல கிடைக்கும்?'' என்று கேட்க... ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்ற விவசாயிகள்... கணக்குப் போட்டபடியே கலைந்தனர்!
தொடர்புக்கு,
பீர்முகமது, செல்போன்: 94433-21882
சதாசிவம், செல்போன்: 94420-94446
ராஜமாணிக்கம், செல்போன்: 99432-65061
கழிசலுக்கு கத்திரி... சளிக்கு கண்டங்கத்திரி!
ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம் பற்றி கருத்தரங்கில் பேசிய சித்த மருத்துவர். ராஜமாணிக்கம், ''ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனா, மெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.
வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி, நெல்லிக்காய் அளவு கொடுத்தா... வாய்ப்புண் ஆறிடும். காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகு, ஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா... சரியாகிடும். 50 மில்லி நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா... தொண்டை அடைப்பான் சரியாகிடும். கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா... விஷக்கடி சரியாகிடும்.
ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். 5 கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் காணாம போயிடும். கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வெள்ளாட்டுக் கோமியத்துல 24 மணி நேரம் ஊறவெச்சு, சாறு எடுத்து, மூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்பு, சளி எல்லாம் சரியாகிடும். சீதாப்பழ மர இலையை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும். ஜீரண கோளாறு வந்தா, 300 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும். நல்லெண்ணெயும், மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும்'' என்று வரிசையாக பட்டியலிட்டுவிட்டு,
''ஆடுகளுக்குத் தேவையான கை வைத்தியத்தைத் தெரிஞ்சு வெச்சுகிட்டா... அவசரத்துக்கு டாக்டரைத் தேடி அலையாம, நீங்களே ஆடுகள காப்பாத்திடலாம்'' என்று நம்பிக்கையூட்டினார்.

நன்றி பசுமை விகடன்.



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++






“ஒரு தலைச்சேரி ஆடு 2 வருஷத்தில் மூணு தடவை குட்டி போடும். ஒரு தடவைக்கு 3 முதல் 5 குட்டி வரை போடும். ஒரு குட்டி பிறக்கும் போதே 4 கிலோவுக்கு குறையாமல் இருக்கும். மூணே மாசத்தில் அது 20 கிலோவாக வளர்ந்திடும். அடர்த்தியான பால் ஒரு நாளைக்கு 2 லிட்டர் வரை கிடைக்கும். முழு வளர்ச்சியடைந்த கிடா வருஷம் முடிஞ்சா 50 முதல் 60 கிலோ வரை கூட எடை வரும். இறைச்சின்னு பார்த்தீங்கன்னா சாதாரண ஆடு ஒரு வருஷம் தாண்டினாலே கறியாக்கினால் வேக்காடு சரியா கிடைக்காது. ஆனா தலைச்சேரியைப் பொறுத்தவரை 4 வருஷம் வளர்ந்த ஆட்டுக்கறி கூட படு ஸ்மூத்தா இருக்கும். சீக்கிரம் வெந்தும் விடும். அதனால இப்பவெல்லாம் தலைச்சேரி ஆடுகளுக்குத்தான் செம கிராக்கி!”

-ஆடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும் பெரிய ‘விரிவுரை’யே நடத்துகிறார் அப்பாஸ். கோவை குனியமுத்தூரில், குறிஞ்சி காலனியில், குறிஞ்சி ஆட்டுப் பண்ணை நடத்தும் இளைஞர். பண்ணை என்றதும் ஏதோ ஏழெட்டு ஏக்கரில் ஆயிரக்கணக்கான ஆடுகளை வைத்து பெரிய அளவில் வியாபாரம் நடத்துகிறார் என்று எண்ணி விடாதீர்கள். வெறும் ஏழு சென்ட் வசிப்பிடத்தில் தன் குடும்பத்துக்கும் ஒரு வீடு அமைத்துக் கொண்டு, எஞ்சியுள்ள பகுதியில் சிறிய ஆட்டுப்பட்டியை உருவாக்கிக் கொண்டு சுயமாகத் தொழில் நடத்துகிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இவரது சொற்ப இடத்தில் தலைச்சேரி மட்டுமல்ல; வால்குரும்பை, உஸ்மேனியாபதி, சிரோய் என்று ஆடுகளில் லேட்டஸ்ட் ரகங்கள் எத்தனை உண்டோ, அத்தனையும் இருக்கின்றன. தினம்தோறும் 20, 30 ஆடுகள் புதிதாக வருகிறது என்றால் அதே அளவுக்கான ஆடுகள் வெளியாட்கள் விலை கொடுத்து வாங்கிச் சென்றபடி இருக்கிறார்கள்.
“சின்ன வயசுல ஹாபியாகத்தான் ஆடு வளர்த்தறதுல ஈடுபட்டேன். இப்ப அதுவே தமிழ்நாடு முழுக்க மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கும் சப்ளை செய்யக்கூடிய வியாபாரமா மாறிடுச்சு. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. ஒரு ஆள் ஒரு தலைச்சேரி ஆடு செனையில வாங்கி வச்சு வளர்த்தார்ன்னா ஆறே மாசத்துல அது ஆறாகி, ஒரு வருஷத்தில் அதுவே முப்பத்தாறாகி இரண்டு வருஷத்தில் நூற்றுக்கணக்கில் பெருக்கம் செய்யக் கூடிய தொழில் இது. இறைச்சி கணக்குல ஒரு கிலோ ரூ. 250 கணக்கிட்டு மொத்த வியாபாரிக்கு கொடுத்தா கூட ஒரு ஆடு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபா வரை கூட விலை போகும். நூறு ஆடு கணக்குப் போட்டு பாருங்க பத்து இலட்சம் ரூபா. இரண்டு வருஷத்துல முதலீடு 5 லட்சம் கழிச்சா கூட மீதி அஞ்சு இலட்சம் சுளையா கிடைக்கும்!” என்று நம்பிக்கை ததும்பப் பேசுகிறார். பொதுவாக ஆடுகள் வளர்ப்பு என்றால் குதிரை மசால் தழை, இளம் புற்கள், செடி கொடிகள்தான் போடணும். அதற்கு நிறைய செலவு பிடிக்கும். பசுந்தழைகள் வறட்சி காலத்தில் கிடைப்பது கடினம் என்று நினைக்கிறார்கள். இதற்கு அவசியமேயில்லை என்கிறார் அப்பாஸ். “ஆடுகளைப் பொறுத்தவரை நாம் எதை சாப்பிடக் கொடுத்துப் பழக்குகிறோமோ அதற்குத் தானாகவே பழகி விடும். பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, அரிசி, பருப்பு, வைக்கோல், வாழை மட்டை கழிவுகள்னு எதைவேண்ணா சாப்பிட்டு வளரும். அதிலும் நாங்கள் பண்ணையில் வைத்திருக்கிற ரகங்கள் எங்கு இருந்தாலும் அந்தச் சூழ்நிலைக்கேற்ப கொடுப்பதைச் சாப்பிட்டு வளரக்கூடிய ரகங்கள்!” என்றும் விளக்கினார் அப்பாஸ்.
ஆடுகளில் வால் குரும்பை 2 வருஷத்தில் 100 கிலோ வரை எடை வரும். தவிர அதன் முடி 12 அங்குலம் வரை வளருமாம். இந்த முடி கம்பளி நெய்தலுக்கு நல்ல விலை போகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த ரகத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். எங்கு வளர்த்தாலும் நோய், நொடிகள் அண்டாதாம். இதன் குட்டிகள் ஒரு மாதத்திலேயே முப்பது கிலோ வரை வளரக் கூடியவை. ஊர் ஊராக மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று பட்டி போட்டு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை வளர்த்து கோடீஸ்வரர்கள் ஆன கதைகள் உண்டாம்.
இந்த ஆடுகள் பட்டி போடும் இடத்தில் புழுக்கைகள் பெரிய அளவு இயற்கை உரமாகப் பயன்படுவதால் விவசாயிகள் பட்டி போடுவதற்குத் தனியாகப் பணமும் கொடுப்பதால், இதன் மூலம் உபரி வருமானமும் கிடைக்கிறது.
சிறுவகை என்று ஒரு ரகம். ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டவை. வருஷத்துக்கு ஒரே குட்டி போடும். அபூர்வமாக 2 குட்டிகள் போடும். 3 மாசத்தில் 30 கிலோ எடை வந்து விடும். ஒரு வருஷத்தில் அறுபது கிலோ எடையை எட்டி விடும். “ஆடு வளர்ப்பில் பிஸினஸுக்கு எது சரியோ அதையே தற்போது விரும்புகிறார்கள். ஆனால் விவசாயப் பெருமக்களுக்கு இது எட்டுவதில்லை. ஆடுகள் மூலம் அவர்களை ஈர்ப்பதும், அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையுமே எனது இலட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறேன்!” என்கிறார் அப்பாஸ்

The contact numbers of Mr.Abbas are 7667643724, 9865711155, 9944623619





Tuesday, 26 November 2013

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் - செ.சி.ப மூலிகை பண்ணை

தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம். இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர் திரு.செ.சி.பவானந்தம்(9629601855), தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும் கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார் இன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும் மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார். மூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார். கோவை வேளாண் பல்கலைகழகத்தில் மூலிகை வளர்ப்பு குறித்த சான்றிதல் படிப்பும் முடித்துள்ளார்.

திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின் பெயர்கள்:
சிறியநங்கை, சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை, நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்), அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில், அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்), ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா மற்றும் பலவிதமான மூலிகைகள்

திரு.பவானந்தம் அவர்கள் கூறிய சில முலிகை குறிப்புகள்:

ஆடாதோடை - காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும்

சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும்

சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) - சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும், நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும். இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.

நாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 

7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு, மா, பலா, கிலா 

மருத்துவ மரங்கள்: வேம்பு, கும்பகொடளி, ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா, இலவங்கம்

செ.சி.ப மூலிகை பண்ணை 
ஆராய்சி மையம், 
79,காமராசர் சாலை, கீரமங்கலம், 
புதுக்கோட்டை மாவட்டம் - 614 624
9629601855
http://maram2020.blogspot.in/