Wednesday 27 August 2014

Post rice green manuring



Growing green manures after harvesting khariff paddy, standing for 6-7 months until puddling the soil for khariff paddy called post rice green manuring. This practice possible for one season paddy growers. Monocots , dicots, oil seeds, millets, spices all mixed together can be grown for green manuring. Road side weeds like indigos, crotalarias, cassias are found to be the best for this practise. Daincha grows up to 14 feet and sun hemp grows upto 8 feet, tractors with double cage wheels would be required to incorporate them into the soil. During monsoon again broadcast 4 kgs of horse gram creeper, they will occupy the remaining space by climbing the green manures standing in the field. The perennial hardy grasses in the field starts withering due to lack of sunlight. Over 10 tonnes of huge biomass will be produced & 3-4 inches of the soil will filled with organic matter when we incorporated the green manures in this practice. This is three times more effective than Pre-rice green manuring. In 2-3 years degraded soils can be conditioned. This is the easiest, fastest, cheapest source to enrich our soil, which is only possible for the paddy growers. It is wise to puddle the soil with green manures than the empty lands.

Green Manuring along with summer crops
Farmers growing two crops of paddy can broadcast 5 to 7 kgs of fox gram (Pillipesalu) in the standing paddy crop at the time of final watering. It is a fast growing, semi aquatic plant and thrives well in these conditions. This is particularly useful during summer crop as it gets enough time to grow as green manure as well as fodder. 
Fast growing ones like daincha, sunhemp should be avoided, weeds are the best green manures for semi irrigated summer crops like green gram, black gram , cowpea, horse gram, jowar etc., these crops can be harvested in 3 months. Then broadcast the field with 4 kgs per acre of horse gram; this creeper will climb on the plants acts as 1st floor by doubling the biomass

ஏழைகளின் ஏ.டி.எம்.!

“வீட்டுல விசேஷம் வெச்சிருக்கேன். அதான் ரெண்டு மாட்டை விக்கலாம்னு...”
-இது போன்ற உரையாடல்கள் கிராமத்து விவசாயிகளிடம் வெகுசகஜமான ஒன்று. விவசாயத்துக்கு மட்டுமல்ல... விவசாயிகளின் அவசரகால பணத் தேவைகளுக்கும் துணை நிற்பது கால்நடைச் செல்வங்கள்தான். அதனால்தான் விவசாய அமைச்சகமும், கால்நடைத் துறையும் இவ்விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கென்றே சென்னையில் தனியாக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கால்நடைகளுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் இதுதான். இதன் துணைவேந்தர் பலராமனைச் சந்தித்து, கால்நடைகள் குறித்த ஆலோசனைகளைக் கேட்டோம்.
“பசு, எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத அமைதியான பிராணி. அதனால்தான் குதிரையைக் காட்டிலும் மனிதனால் அது அதிகமாக நேசிக்கப்பட்டு, அவனுடனேயே வாழும் ஒரு பிராணியாக இன்று வரை இருந்து வருகிறது. மனிதனுக்கு தேவைப்படாத உணவினை சாப்பிட்டு, பயனுள்ள பல பொருட்களை தருகிறது. அது தரும் பால் உணவாகிறது. கோமியமும், சாணமும் உரமாகிறது. ஆடும் அதே போலத்தான்.

இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தை மட்டும் செய்தால் லாபம் கிடைக்காது. கூடவே அதன் துணைத்தொழிலான கால்நடை வளர்ப்பினையும் கட்டாயம் செய்ய வேண்டும். பொதுவாக நூறு ஆடுகளை வளர்க்கும் ஒரு விவசாயிக்கு, ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட நூறு குட்டிகள் வரை கிடைக்கிறது. ஆடுகளோட கழிவுகளின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வருமானமும் கிடைக்கும்.
விவசாயத்தைக் காட்டிலும் கால்நடை வளர்ப்பு மூலம் மும்மடங்கு லாபம் எடுக்க முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டால் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய்தான் வருமானம் வரும். ஆனால், அதே நிலத்தில் ஐந்து பால் மாடுகள் வளர்த்தால் பால் வியாபாரம் மூலமாகவே கிட்டத்தட்ட 36 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதுபோக சாணம் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கும். கன்றுகள் அதனினும் கூடுதல் வருவாயான ஒரு விஷயமே.
ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம்தான் பிரச்னையாக இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் முறையாக பசுந்தீவனம் வளர்த்து ஐந்து மாடுகளையும் பராமரித்து வந்தால் அந்த விவசாயி வீட்டிலேயே நடமாடும் 'ஏ.டி.எம். மெஷின்' இருப்பது போலதான். உடனடி பணத்தேவைக்கு அவை நிச்சய கியாரண்டி’’ என்று நம்பிக்கை தரும் சிரிப்போடு சொன்ன துணைவேந்தர்,
''எங்கள் பல்கலைக் கழகத்தில் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றை சொல்லித் தருகிறோம். தமிழகம் முழுவதும் பல இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் தாரளமாக பயிற்சி பெறலாம்'' என்றும் அழைப்பு வைத்தார். (தொடர்புக்கு: 044- 25551574)

மதுரை மாவட்டம், மேலூரில் தமிழ்நாடு வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை பராமரிப்புத் துறை இருக்கிறது. இங்கே விவசாயிகளுக்கு ஆடு, மாடு வளர்ப்பு, பால்பண்ணை தொழில், வெண்பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு என பல பிரிவுகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மதுரைமேலூர் சாலையில், இருக்கும் இந்த ஆராய்ச்சி நிலையத்தில், ஒரு பால்பண்ணை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தகுந்த தொழில் நுட்ப அடிப் படையில், சிறப்பான உள்கட்டமைப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது பால்பண்ணை. அங்கு பணியிலிருக்கும் கால்நடை பாராமரிப்புத் துறை பொறுப்பாளர் டாக்டர். பால் பிரின்சி ராஜ் குமாரிடம் நாம் பேசியபோது,
“நம்ம மாநிலத்துல இருக்கற அரசு சார்ந்த சிறந்த பத்து பண்ணைகள்ல எங்களுடைய பண்ணையும் ஒண்ணு. எங்க காலேஜில் உள்ள விடுதிக்கும், குடியிருப்பு பகுதிக்கும் தேவைப்படுற அளவுக்கு பாலை இந்த பண்ணையில இருந்து எடுத்துக்கறோம்.
இங்க, நம்ம நாட்டு இனமான ரெட் சிந்தி, தார்பார்க்கர், கிர் மாடுகளும் வெளிநாட்டு இனமான ஹால்ஸ்டியன் பிரீசியன், ப்ரௌன் சுவிஸ், அயர்சையர், ரெட் டேன் மாடுகளும் இருக்கு. ஒவ்வொரு பசுவையும் அறிவியல் முறையில தனித்தனியா கவனிக்கறதால சராசரியா ஒவ்வொரு பசுவும் பத்துல இருந்து பதினைஞ்சு லிட்டர் வரைக்கும் கறக்குது. பால் உற்பத்திக்கு மட்டுமில்லாம, விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக் கவும் இந்த பண்ணை பயன்படுது. தமிழ்நாட்டோட பல பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானவங்க இங்க இலவசமா பயிற்சி எடுத்திருக்காங்க. அதுல பல பேர் பெரிய அளவில வெற்றிகரமா பண்ணை நடத்திட்டு இருக்காங்க” என்று பண்ணையின் செயல்பாடுகள் பற்றி விவரித்தார்.
அடுத்து, நம்மிடம் பேசிய கால்நடை மருத்துவர் செல்வகுத் தாலிங்கம், ‘‘பால் பண்ணை தொழிலில்ல பலர் தோத்துப் போறதா சொல்றாங்க. முறையா செஞ்சா பெரிய அளவிலான லாபம் கொடுக்கக்கூடிய தொழில் தான் இது. பொதுவா மாடு வளர்க்க ஆகுற செலவுல 70 % தீவனத்துக்குதான் போகுது. இவ்வளவு செலவு செஞ்சும் அதிக பால் கிடைக்கறது இல்ல. அதுனாலதான் நஷ்டம் வருது. அப்படி இல்லாம அறிவியல் பூர்வமா பண்ணையைக் கவனிச்சா நல்ல லாபம் ஈட்டலாம். அறிவியல் பூர்வம்னு சொன்னா மிரண்டுற வேணாம். சாதா ரணமா கடைகள்ல கிடைக்கற அடர் தீவனங்களை வாங்கி மாடுகளுக்குக் கொடுக்கும்போது உற்பத்தி செலவு கூடுது. ஆனா, புரத சத்து நிறைந்த பசுந்தீவனங்களை மிகக் குறைந்த செலவில் நாமே உற்பத்தி செய்து பயன்படுத்தும்போது பால் உற்பத்தியும் அதிகரிக்கும், செலவும் குறையும்.
இங்க பயிற்சிக்கு வரும் விவசாயிகளுக்கு பசுந்தீ வனங்கள் பயிரிடும் முறைகளையும் நாங்களே சொல்லிக் கொடுத்து, விதைக் கரணைகளையும் குறைவான விலைக்குக் கொடுக்கிறோம். பசுந்தீ வனங்களை முறையாக கொடுத்தாலே சராசரியா ஒரு பசு, பத்து லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கும். அதே போல பால் கறக்கறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்ன தீவனம் கொடுக்கணும். அப்பதான் ஒரு மாடு கொடுக்கக்கூடிய பாலோட சராசரி அளவு தெரியும்.
சிறு விவசாயிகள், மாட்டை பத்தின விவரங்கள் அடங்கிய பதிவேட்டை பராமரிக்கறதில்லை. சினை பருவம், பால் அளவு, லாப-நட்ட கணக்கு எல்லாத்தையும் முறையா பராமரிக்கணும். இதெல்லாம்தான் அறிவியல் பூர்வமானமுறை. இதை மட்டும் ஒழுங்கா கடைபிடிச்சா நிச்சய லாபம்தான்” என்று அடித்துச் சொன்னார்.
'மாடு இல்லா விவசாயமும்... மரம் இல்லா தோட்டமும் பாழ்' என்ற சொலவடையை நம் முன்னோர்கள் சும்மாவா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
தொடர்பு முகவரி: கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேலூர் சாலை, மதுரை-625104. போன்: 0452-2422955.


நன்றி: பசுமை விகடன்

Monday 25 August 2014

ஜீரோ பட்ஜெட்:16 ஏக்கர் காடு... ஒரே ஒரு மாடு!

பெங்களூருவிலிருந்து ரயிலில் பயணம்... எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பெண் பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின், ஆங்கில தினசரி ஒன்றை அவசரம் அவசரமாக படிக்க ஆரம்பித்தார். கையில் செய்தித்தாள்... காதில் அலைபேசி சகிதமாக, ''எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு பிளாட் இருக்கிறது... விலை ரூ.20 லட்சம். பண்ணாரி கட்டா ரோட்டில், ஒரு கிரவுண்ட் காலி மனை இருக்கிறது. விலை ஒரு கோடி'' என்று பேசிக் கொண்டே வந்தார்.
நன்றாகப் படித்தப் பெண், ஐ.டி. கம்பெனியில் வேலை... மாதம் 50 ஆயிரம் சம்பளம். ஆனால், தான்... தனது குடும்பம்.. குழந்தைகள் என்ற அளவில் மட்டுமே சிந்தனையை குறுக்கி கொண்டவர் என்பதை அவருடைய பேச்சிலும் செயலிலும் நன்றாகவே உணரமுடிந்தது. 5 ரூபாய் கொடுத்து பேப்பர் வாங்கி, ஒரு 5 நிமிடம் கூட மற்ற பொதுச்செய்திகளை அவர் வாசிக்கவில்லை. 'சமுதாயம் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? என் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால்போதும்' என்ற குறுகிய மனப்பான்மை எயிட்ஸ் நோயைவிட ஆபத்தானது என்பதை இவர்களுக்கு யார்தான் உணர்த்துவது.
பாக்கெட்களில் விற்கும் உணவு பண்டங்களில், விவசாய விதை வித்துகளில், காய்கறிகளில் எல்லாம் விஷம் சேர்ந்து கிடக்கிறது. அவற்றை விற்று கொள்ளையடிக்கின்றன பகாசுர நிறுவனங்கள். இப்படிப்பட்ட சமுதாயச் சீரழிவுகள் கண்டு கொதித்து எழாமல் குடும்பத்துக்குள் குறுக்கிக் கொள்வது சரியாகப்படவில்லை. லட்சுமணக் கோடுகளைத் தாண்டி பெண்கள் வெளியே வர வேண்டும். அப்பொழுதுதான் சமுதாயம் உருப்படும்.
''அதுசரி, 'ஜீரோ பட்ஜெட்' விவசாயத்துக்கும்... இப்போது நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம்'' என்கிறீர்களா...?
ஏராளமான சம்பந்தம் இருக்கிறது. இந்த இதழ் 'ஜீரோ பட்ஜெட்'டில் நாம் பார்க்கப்போவது கதாநாயகனை அல்ல... கதாநாயகியை! கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்க அமைப்பாளராக இருக்கும் திருமதி பாரத்தி என்பவர்தான் அந்தக் கதாநாயகி (தொடர்புக்கு: 08172-228524).
ஆண்களே அழுதபடி செய்து கொண்டிருக்கும் விவசாயத்தை... ஒரு பெண், அதுவும் இளம் பெண் சவாலாக ஏற்று சாதித்துக்கொண்டிருக்கிறார். அவரின் முழுபணியையும் கேட்டு முடித்தபோது, கிட்டத்தட்ட பாரதி சொன்ன புதுமைப்பெண்ணாகவே நமக்கு காட்சியளித்தார் பாரத்தி.
ஹாசன் நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஏ.குடுஹனஹள்ளி என்ற கிராமத்தில்தான் இருக்கிறது பாரத்தியின் தோட்டம். காலை வேளையில் அங்கே நாம் நுழைந்தோம். பூத்து குலுங்கும் புன்னகைத் தோட்டமாக எங்களை வரவேற்று, வெள்ளாமைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார் பாரத்தி. வெனிலா பீன்ஸ், காபி, கோக்கோ, தென்னை, பாக்கு என்று வளர்ந்து கிடக்கும் காடு அது. பசுமை சூழ்ந்த 16 ஏக்கர் நிலத்தில் விரவிக்கிடக்கும் அந்தக்காட்டை 70 வயது நிரம்பிய தன் மாமனார் அனுமே கவுடா மற்றும் இரு பணிப்பெண்களுடன் இணைந்து பராமரித்து வருகிறார் பாரத்தி.
அனுமே கவுடா, வேளாண் பட்டம் பெற்று, கர்நாடக அரசின் விவசாயத்துறை துணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். பாரத்தியின் கணவர், காலை 8 மணிக்கு ஹாசன் சென்றால் இரவு 8 மணிக்குத்தான் வீடு திரும்புவார். நகரத்தில் ஐஸ்க்ரிம் பார்லர் வைத்து இருக்கிறார்.
''ஏன், அவரும் உங்களோடு தோட்டத்தில் வேலைப் பார்க்கக் கூடாதா...?'' என்று கேட்டால்,
''எங்களுக்கே வேலை இல்லை. அவர் வேறு எதற்கு?'' வலி தெரியாமல் தாங்கள் பார்க்கும் விவசாயத்தை, வடிவான வார்த்தைகளில் சொன்னார் பாரத்தி. அவர்கள் வார்த்துக்கொண்டிருக்கும் விவசாயத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது, பார்த்து உணரக்கூடிய மாபெரும் கடல் அது. நான் எவ்வளவுதான் எழுதினாலும், வார்த்தைகளில் வடிவம் கொடுத்தாலும் நேரில் பார்ப்பதற்கு எதுவுமே ஈடாகாது.
பேசிக்கொண்டே வரப்புகளில் நகர்ந்தார் பாரத்தி...
விவசாயிகளின் மூச்சை நிறுத்துவது முட்டுவளிச் செலவு எனப்படும் ஆரம்பகட்டச் செலவுகள்தான். நிலம் தயாரிப்பு, உரம், பூச்சி மருந்து என்று அதிகரிக்கும் முட்டுவளிச் செலவு என்பது ‘ஜீரோ’வானால்... நஷ்டமும் இல்லை, கஷ்டமும் இல்லை. இந்தப் பணியைத்தான் ஜீரோ பட்ஜெட் சூத்திரம் செய்து கொண்டிருக்கிறது.
ஜீரோ பட்ஜெட் முறைப்படியான விவசாயத்துக்கு ஆட்கள் கூட அதிகம் தேவை இல்லை. ‘விதைக்கின்ற காலத்தில் ஊருக்குப் போனால், அறுவடைக் காலத்தில் ஆள் தேவையில்லை’ என்ற சொல் வழக்கையும் பொய்யாக்கி... உழவே வேண்டாம், அறுவடைக்கு மட்டும் ஆள் இருந்தால் போதும் என்று ஜெயித்து காட்டும் விவசாயம் இது'' என்று பெருமிதமாகச் சொன்ன பாரத்தி, தன் மாமனார் அனுமே கவுடாவிடம் நம்மை அறிமுகப்படுத்தினார்.
31 வருடங்கள் விவசாயத்துறை துணை இயக்குநராக பணியாற்றி யிருக்கும் அனுமே கவுடா, ''அரசாங்கத்தின் சொல்படி கேட்டு, ரசாயன உரம்... பூச்சி மருந்து இதையெல்லாம் ஊர் முழுக்க தெளிக்கச் சொன்னது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்'' என்று வார்த்தைக்கு வார்த்தை மருகினார்.
‘‘நான் விவசாய பட்டப்படிப்பு படித்தவன். 1960-ல் கர்நாடக அரசு பணியில் சேர்ந்தேன். அது 'பசுமை புரட்சி'யின் ஆரம்பகாலம். அதுவரை இயற்கை உரங்களை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்த முறையை ஒரேயடியாக தூக்கி எறிந்துவிட்டு, ரசாயன உரத்துக்கு நாட்டையே மாற்றிய காலம். 'ரசாயன உரம் போட்டால், முன்று மடங்கு விளைச்சல் கூடும்' என்று அரசு கூறியதை கிளிப்பிள்ளையைப் போல நாங்களும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி விவசாயிகளை மாற்றினோம்.
'உப்பு, உரம், யூரியா இதையெல்லாம் போட்டால் காடு கெட்டுவிடும். பயிர்கள் கருகி நாசமாக போய்விடும்' என்று அப்போதே என்னுடைய அண்ணன்கள் எதிர்த்தார்கள். அதையும் மீறி, வேளாண்மைப் படிப்பு படித்துவிட்டோம் என்கிற மமதையில் ரசாயன உரங்களை எங்களது தோட்டத்திலும் கொட்டினேன். சில வருடங்களில் விளைச்சல் கூடியது. ஆனால், வரவர எவ்வளவு உரத்தைக் கொட்டினாலும் விளைச்சல் பாதியில் படுத்துவிட்டது. முட்டுவளிச் செலவு கூடியது. விளைச்சலோ குறைந்து கொண்டே போனது. அப்பொழுதுதான் மூளையில் ஒரு பொறி தட்டியது. மண்ணைப் பரிசோதித்து பார்த்தபோது... மண் மரணமடைந்து இருந்தது தெரிய வந்தது. நுண்ணுயிர்கள் நிறைந்த மண்ணே உயிர் உள்ள மண். ரசாயன உரமும்... உப்பும் மண்ணில் உள்ள நுண்ணியிரிகளை கொன்றுவிட்ட பிறகு, மண் மாண்டு போன நிலைதான். எத்தனை ஆயிரம் விவசாய குடும்பங்களின் விளக்கை அணைத்து விட்டோம் என்கிற வேதனை இதயத்தை இன்றும் கூட இறுக்கிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது, அரசு சொல்லியதை அதன் ஊழியனாகிய நான் செயல்படுத்தினேன். அதற்காக இப்போது வெட்கப் படுகிறேன்'' என்று உணர்ச்சி வசப்பட்டவர்,
''91-ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டேன். அரசு பணியில் கற்றுக்கொண்டத் தவறுகளை திருத்திக்கொண்டு, பழைய போக்கில் சிந்தித்து... இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். இயற்கை உரம் கொண்டு 12 ஏக்கரில் தென்னை நடவு செய்தேன். இதற்காக, என் அப்பா கால முறைப்படி இயற்கை உரத்தை நானே தயாரித்தேன்.
பெரிய குழி எடுத்து, அதில் இலை, தழை, தாம்புகளை நிரப்பவேண்டும். அதன்மீது மாட்டுச்சாணம், கோமியம், நல்ல ஊட்டச்சத்துள்ள மண் ஆகியவற்றைப் போட்டு மூடி மூன்று மாதங்கள் கழித்து எடுத்து வயலுக்குப் போட வேண்டும். இதன் மூலம் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகும். இந்த நுண்ணுயிரிகள்தான் பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை மண்ணிலிருந்து பிரித்து கொடுக்கும் பணியை செய்கின்றன.
2005-ம் ஆண்டில்தான் பாலேக் கரின் ஜீவாமிர்தத்தைக் கேள்விப்பட்டு அதை பயன்படுத்த ஆரம்பித்தேன். ஆகா, என்ன அற்புதமான மருந்து அது. நுண்ணுயிரிகளைப் பெருக்கும் பணியை 'ஜீவாமிர்தம்' மிக எளிதாக செய்து முடிக்கிறது. அதைபோட ஆரம்பித்த பிறகு, விளைச்சல் பெருகி விட்டது'' என்று நிறுத்தியவர்,
''சிக்கமகளூர் காப்பி தோட்டப் பெண் பாரத்தி என் மருமகளாக வந்தது நான் செய்த பாக்கியம். 12 ஏக்கர் தென்னை போக மீதமிருந்த 4 ஏக்கரில் தென்னையோடு காப்பி, பாக்கு என எல்லாவற்றையும் பாலேக்கர் சொற்படி போட்டு, இந்தக் காட்டை சிக்கமகளூர் மலைநாட்டுக் காடாக மாற்றியதோடு, முழுவேலை களையும் தானே பொறுப்போடு கவனித்துக் கொள்கிறார்'' என்று மருமகளை மெச்சினார்.
மீண்டும் பேச ஆரம்பித்த பாரத்தி, ''ஒரு பாக்கு மரத்தில் 5 கிலோ வரையே வருடத்துக்கு விளைச்சல் கிடைத்து வந்தது. ஜீவாமிர்தம் கொடுக்க ஆரம்பித்ததும் மரத்துக்கு 8.5 கிலோ வரை விளைச்சல் உயர்ந்துள்ளது. அடுத்த வருடம் 10 கிலோ வரை எதிர்பார்க்கிறேன். ஒரு ஏக்கரில் 560 பாக்கு மரங்கள் உள்ளன. ஒரு கிலோ பச்சை பாக்கு ரூ. 120 முதல் 140 வரை விற்கிறது'' என்று சொன்னவரிடம்,
''ஏக்கருக்கு என்ன வருமானம் கிடைக்கும்?'' என்று கேட்டோம்.
''நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்களேன். இந்த ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் வரவு மட்டும்தான். செலவே இல்லை. 16 ஏக்கர் பூமி முழுவதற்கும் எரு கொடுப்பது ஒரே ஒரு பசுமாடு... அதன் கன்று ஆகியவைதான். கூடமாட ஒத்தாசைக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவ்வளவுதான் செலவு'' என்று தெம்பாகவேச் சொன்னார் பாரத்தி.
ஒரு ஏக்கரில் பாக்கு வருமானம் என்னவாக இருக்கும் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்தோம். ஏக்கருக்கு 560 மரங்கள். மரத்துக்கு 8.5 கிலோ பாக்கு விளைகிறது. கிலோ சராசரியாக ரூ.130 என்று வைத்துக் கணக்குப்போட்டால்... 6,18,800 ரூபாய் வருகிறது. நாம் மயக்கம்போட்டு விழாத குறைதான்.
''கணக்கு சரியா.?'' என்று பாரத்தியிடம் கேட்டோம். ''உங்களிடம் பொய்சொல்லி என்ன ஆகப்போகிறது!'' என்று கேட்டு வாயை அடைத்துவிட்டார்.
தோட்டத்தில் ஊடு பயிராக காபி, வெனிலா, கொக்கோ என கூட்டணி போட்டு பசுமை பந்தலாக... பார்க்கவே பரவசப்படுத்துகிறது.

நன்றி: பசுமை விகடன்

Sunday 24 August 2014

சிரோஹி ஆடுகள்

பொதுவாக சிறு குறு விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகள் ஆகியோரின் வாழ்வாதாரத் தேவையை நிறைவேற்றி வருபவை கோழிகள் மற்றும் ஆடுகள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பல்வேறு களைச் செடிகள், புற்கள், தாவரங்கள், சமயலறைக் கழிவுகள் ஆகியவற்றையே உணவாகக் உட்கொண்டு... பால் மற்றும் இறைச்சியைத் தர வல்லவை ஜமுனாபாரி, தலைச்சேரி போன்ற பொதுவான இந்திய வகை வெள்ளாடுகள். குறைந்த பரமரிப்பு மற்றும் குறைந்தத் தீவனச் செலவில் பால் மாடுகளைக் காட்டிலும், அதிக வருமானம் தருபவை இந்த வகையான ஆடுகள் என்பதால், இவற்றுக்கு விவசாயிகளிடையே நல்ல மரியாதை.
அந்த வரிசையில் தமிழகத்தில் அறிமுகமாகியிருக்கும் புது வரவுதான் சிரோஹி ஆடு. இந்த வகை ஆடுகளின் இன்னொரு தனிச்சிறப்பு, இவற்றின் இறைச்சி தமிழ்நாட்டு ஆடுகளின் இறைச்சி சுவைக்கு இணையாக இருப்பதுதான். தவிர, இந்த ஆடுகளுக்கு மேய்ச்சல் பழக்கம் இல்லாததால், கொட்டில் முறை வளர்ப்புக்கு ஏற்ற ரகமாக இருக்கின்றது.
இரண்டு வருடங்களாக, சிரோஹி ரக ஆடுகளைக் கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னேகவுண்டன்புதூரைச் சேர்ந்த பெண் விவசாயி கலாமணி. அதுமட்டுமல்லாமல் சிரோஹி ரக கிடாவையும் நாட்டு ரக பெட்டை வெள்ளாடுகளையும் இணைத்து, புதிய ரகத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார் கலாமணி.

கொட்டில் முறையில ஆடு வளக்கணும்னு ஆசைப்பட்டு, கொட்டில் தயார் பண்ணி, கோ-3, கோ-4, மல்பெரி, அகத்தி, வேலிமசால் மாதிரியான தீவனப் பயிர்களை விதைச்சுட்டு ஆடுகளுக்காக அலைஞ்சுகிட்டுருந்தப்பதான், கேரளாவிலிருக்குற ஒரு டாக்டர் மூலமா இந்த வகை ஆடுகளைப் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே, அந்த டாக்டர் மூலமாவே 6 மாச வயசுல... 4 பெட்டை, ஒரு கிடாக் குட்டியை உயிர் எடைக்கு கிலோ 240 ரூபாய்னு மொத்தம் 36,000 ரூபாய் கொடுத்து வாங்கினேன். இப்ப ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. சில கிடாக் குட்டிகளை வித்தது போக, 19 உருப்படி பண்ணையில இருக்கு. அம்பது ஆடாவது வைச்சுருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கறதால கிடாக்களை மட்டும்தான் விக்கிறேன். பெட்டையையெல்லாம் நானே பராமரிச்சுகிட்டுருக்கேன்.
நம்ம நாட்டு ஆடுகள் மாதிரியே இதுக்கும் இரண்டு வருஷத்தில் 3 ஈத்துதான். ஒரு ஈத்துக்கு சராசரியா இரண்டு குட்டிகள் ஈனும். பெட்டைக் குட்டிகள் 6 மாசத்துல பருவத்துக்கு வந்துடும். இந்த வகை ஆடுகளுக்கு 30 பெட்டைக்கு ஒரு கிடா இருந்தா, போதும். கிடாக்களை மட்டும் ஒண்ணரை வருஷத்துக்கு ஒருமுறை மாத்திக்கிட்டோம்னா... மரபணு ரீதியா வர்ற நோய் உள்ளிட்ட பிரச்னைகள் இல்லாம ஆரோக்யமான குட்டிகள் கிடைக்கும்.
இந்த ஆடுகள், அடர் காபித் தூள் நிறத்துல அங்கங்க வட்ட வட்டமா கருப்புத் திட்டுக்கள், மாவிலை மாதிரியான நீளமான காதுகளோட மினுமினுனு பாக்கவே அழகா இருக்கும். தவிர, 'கொழுகொழு'னு சதைப்பிடிப்பா கம்பீரமாவும் இருக்கும். இந்த ஆடுகளுக்கு மேயத் தெரியாததால கொட்டில்லேயே தீவனம் கொடுத்து வளக்குறேன். அதனால நல்ல எடை வருது. சாதாரணமா நாட்டு ஆடு ஆறு மாசத்துல 13 கிலோ எடை வரும். ஆனா, சிரோஹி 15 முதல் 20 கிலோ வரை எடை வந்துருது. தீவன இலைகளை கயித்துல கட்டி தொங்க விட்டா போதும். அதேமாதிரி கொஞ்சம் அடர் தீவனமும் கொடுத்தா... வளர்ச்சி நல்லா இருக்கும்'' என்று தன் அனுபவத்திலிருந்து விஷயங்களை எடுத்து வைத்த கலாமணி,
"புதுமுயற்சியா, நாட்டுப் பெட்டை ஆடுகளோட சிரோஹி கிடாவை சேர்த்து விட்டேன். அதுல பிறந்த கலப்புக் குட்டிங்க காது மற்றும் உடல்வாகு எல்லாம் சிரோஹி மாதிரியாவே இருக்கு. சாதாரணமா நாட்டு ஆட்டுக்குட்டிகள் பிறக்கும்போது, ஒன்றரை கிலோவில் இருந்து 2 கிலோ வரைதான் எடை இருக்கும். ஆனா, இந்த கலப்புக் குட்டிங்க 3 கிலோ எடை இருக்கு. ஆனா, மேயத்தெரியல. இதேமாதிரி தொடர்ந்து ஏழெட்டு தடவை, கலப்புக் குட்டிகளை எடுத்தா... அது புது ரகமா இருக்கும். அதை அப்படியே தனி ரகமா பராமரிச்சு வளர்த்தெடுத்தா... நம்ம ஊர்ல இருக்கற ஆடுகளோட ரகத்துல ஒண்ணு கூடுதலாயிடும்.
தமிழ்நாட்டு ஆடுகள் மாதிரியேதான் சிரோஹி ஆடுகளோட இறைச்சியும் இருக்கு. அதனால, இதுக்கு நல்ல மார்க்கெட்டும் இருக்கு. பொதுவா இந்த மாதிரி வெளி மாநில ஆட்டுக் கறியில கவுச்சி அடிக்கும். இதுல அது இல்லை. அதனால விக்கிறதுலயும் பிரச்னை இருக்கிறதில்லை" என்று காரண காரியங்களோடு சொன்னார் கலாமணி.
புது முயற்சிக்கு வாழ்த்துகள்!

 

நன்றி: பசுமை விகடன்


Tuesday 12 August 2014

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்:

தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல்
தும்பை இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்
செய்முறை :-
சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும்.
மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.

Wednesday 6 August 2014

மண்புழு மன்னாரு (பசுமை விகடன்)

மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும்.
தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம்.
சீமைக் கருவேல், வேலிக்காத்தான், ஆபீஸ் முள்னு பல பேர்ல சொல்லப்படற முள்ளுச்செடி நம்ம ஊர்ல எங்க பாத்தாலும் வளந்து கிடக்கும். இதோட காய்ங்க கால்நடைக்கு அருமையான தீவனம். முதிர்ந்த காய்ங்க பளபளனு மஞ்சள் நிறத்துல இருக்கும். அதை சேகரிச்சி தினமும் அரை கிலோ வீதம் பால் மாட்டுக்கு கொடுத்து வந்தா, அதிகமா பால் கிடைக்கும். மாடும் நல்ல கொழுகொழுனு இருக்கும்.
வெண்டைச் செடிக்கு சத்துப் பற்றாக்குறை வந்துச்சுன்னா, வெள்ளை வெளேர்ன்னு வெளுத்துடும். இதை சரி செய்யவும் சீமைக் கருவேல்தான் உதவி செய்யுதுங்க. அரை லிட்டர் சீமைக் கருவேல் இலைச்சாறை பத்து லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சா வெண்டைச் செடி பசுமையா மாறிடும். காயும் சும்மா பச்சை பசேல்னு இருக்கும்.
மிளகாச் செடிய அடிக்கடி சாம்பல் நோய் தாக்கும். இதைத் தடுக்கவும் சீமைக் கருவேல் கைக் கொடுக்குதுங்க. பத்து லிட்டர் தண்ணியில அரைலிட்டர் சீமைக் கருவேல் சாறைக் கலந்து தெளிக்கலாம். இப்படி செஞ்சா இலைப் புள்ளி நோயும் வராது. மிளகாச் செடியும் பச்சை, பசேல்னு இருக்கும்.
நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு.
மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.