Friday 28 August 2015

Natural herbal medication for Cattle:

Problem: Ticks
Ticks and insects which bite and stick to the cattle create a lot of problem. To avoid this, regular washing of cattle and medication is to be followed.

Medication 1:
Mix 1 kg of Dronapushpi leaves and 1 kg of Neem leaves. Crush them with water and make a solution. Spray this on the cattle in the morning and afternoon. Wash them in the evening.
Repeat this for 4-5 days.

Medication 2:
Mix equal amounts of Dronapushpi(200 gms), Neem(200 gms) and Mari Gold leaves(200 gms) in equal amount of Castor Oil (200ml) and crush them. Apply this solution till the ticks fall off.

Medication 3:
Boil 250 gms of Dry Tobacco 2 liters of water.
Spray on Animal, Wash next day and the ticks will Fall off.

Medication 4:
Crush Custard Apple leaves and Neem leaves in water and apply this to cattle morning. Wash in the evening.


Thursday 20 August 2015

எந்ததெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும்?

கந்தக பூமி:இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில் சோளம், கேழ்வரகு, பருத்தி, தினை, கம்பு, ஆமணக்கு, அவரை, பழமரம், கிராம்பு, மிளகு, ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.

கருமணல் பூமி:கருமணல் கலந்த பூமியில் கரும்பு, சாமை, தட்டைபயிறு, முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும். 

சாம்பல் நிற பூமி:சாம்பல் நிற மண்ணில் வெங்காயம், புகையிலை, வாழை, பருத்தி, நிலக்கடலை நன்றாக வளரும்.

செம்மண் பூமி:செம்மண்ணில் பருத்தி, சோளம், கம்பு, அவரை, துவரை மாதிரியான பயிர்களும், பல வகையான பழமரங்களும் நன்றாக வளரும்.

வண்டல் பூமி:வண்டல் மண்ணில் பருத்தி, சோளம், கரும்பு, கம்பு, நெல், மிளகாய், கோதுமை, ராகி, வாழை, மஞ்சள், பழமரம் போன்ற அனைத்தும் வளரும்.

கரிசல் பூமி:கரிசல் மண்ணில் பருத்தி, சோளம், கடலை, கோதுமை, தினை, கேழ்வரகு, கரும்பு, கொத்தமல்லி நன்றாக வளரும்.


Wednesday 29 July 2015

கால்நடை மருத்துவத்துல வேம்பின் பயன்கள்

சினை பிடிக்காத மாடுகளுக்கு அரை கிலோ வேப்பம்பிண்ணாக்கு தண்ணீரில் ஊர வைத்து மறுநாள் வடிகட்டிய தண்ணீரை மாட்டுக்கு கொடுக்கணும். இதே மாதிரி 2-3 நாள் கொடுக்கலாம்.
இப்பிடி கொடுத்தமுன்னா கருப்பையில் புண்ணு இருந்தாலும், நோய்த் தொற்று இருந்தாலும் சரியாயிடும். அதுக்குப் பிறகு சினை ஊசி போட்டமுன்னா சினை பிடிக்கும்.
ஆடு மாடுகளுக்கு கழிச்சல் இருந்தா வேப்ப கொழுந்து, மாதுள கொழுந்து ஒவ்வொண்ணையும் ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து சேர்த்து நல்லா அரச்சு கால்நடைகளுக்கு கொடுத்தமுன்னா கழிச்சல் நிக்கும்.
வேப்ப இலையை பொடி பண்ணி வெச்சுக்கிட்டு தினமும் 20கிராம் அளவுல கன்னுக்குட்டிகளுக்கு கொடுத்துக்கிட்டு வந்தமுன்னா கல்லீரல் பாதிப்பால் வரக்கூடிய பசியின்மை, சோர்வு, மற்றும் எடை குறைவு எல்லாம் குணமாகும். அதோட கல்லீரல் இயக்கமும் உடல் நலமும் சீரா இருக்கும்.


Friday 17 July 2015

சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்

பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்... தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.
கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.
தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.


அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்து’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.
'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம்  பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
எருமை எதையும் கழிக்காது!
நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.
ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஒரே ஈத்துல எடுத்துடலாம்!
'வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக,
75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.
பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்து, சாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவு கொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன். இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான், பண்ணையில் தங்கி வேலை செய்யுற அஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம். இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரி) சிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி, ஜீவாமிர்தமா மாத்தி, பாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வர்றேன். சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.
தொடர்புக்கு, சி. கணேசன்,
செல்போன்: 98652-09217.




Thursday 16 July 2015

எருமை வளர்ப்பு!

பால்பண்ணை, பால்மாடு என்றாலே... கலப்பினப் பசுக்கள்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு நம் நாட்டு பாரம்பர்ய பசு மற்றும் நாட்டு எருமை ஆகியவற்றை ஓரங்கட்டி, நமக்குள் வியாபித்துக் கிடக்கின்றன வெளிநாடுகளைச் சேர்ந்த ஜெர்சி, சிந்து, ஃபிரீசிஸியன் போன்ற கலப்பின மாடுகள்! அதற்குக் காரணம்... 'இந்த வகையான மாடுகளுக்கு அதிகப் பராமரிப்புத் தேவைப்பட்டாலும், ஒரு எருமை சாப்பிடும் தீவனத்தைவிடக் குறைவாகச் சாப்பிட்டு, ஐந்து எருமை கொடுக்கும் அளவுக்கு அதிக பால் கொடுக்கும் என்பதுதான்!
இதுபோன்ற காரணங்களால் நாட்டுப் பசு மற்றும் எருமை போன்றவற்றின் வளர்ப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. என்றாலும், தயிர், தேநீர் போன்ற உபயோகங்களுக்குப் பலராலும் இன்றளவும் எருமைப் பால் விரும்பப்படுகிறது. எருமை, குறைவாகப் பால் கொடுத்தாலும், அதிலிருக்கும் கொழுப்புச் சத்தின் அளவு மிகவும் அதிகம் என்பதும் அந்தப் பால் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம். இப்படிப்பட்டோரை மனதில் வைத்து... பல கிராமங்களில் எருமை வளர்ப்பு ஓரளவுக்கு நடந்து கொண்டுதானிருக்கிறது. அந்த மாதிரியான 'எருமை வளர்க்கும்' கிராமங்களில் ஒன்று... தேனி மாவட்டம், சங்கராபுரம் அருகில் இருக்கும் வடமலைராஜபுரம்.
எருமை வளர்ப்பில் கரை கண்ட இந்த ஊர்க்காரர்களில் ஒருவரான கருப்பையா, அதைப் பற்றி இங்கே பேசுகிறார். 'நான் பெருசா ஒண்ணும் படிக்கல. அதனால எனக்கு எந்த வேலையும் கிடைக்கல. இருந்த தோட்டத்துல கொஞ்சம் விவசாயத்தைப் பாத்துக்கிட்டே விவசாயக் கூலி வேலையையும் செஞ்சுட்டுருந்தேன். அப்போவெல்லாம் கிராமங்கள்ல எல்லா வீட்டுலயும் பாலுக்காக எருமை மாடு வளப்பாங்க. அதனால நானும் ஒரு எருமை வாங்கலாம்னு ஆசைப்பட்டேன். 83\ம் வருஷம், கையில இருந்த காசையெல்லாம் புரட்டிப் போட்டு முன்னூறு ரூபாய்க்கு ஒரு எருமைக் கன்னு வாங்கினேன். நாய்க்குட்டி மாதிரி அந்த எருமைக் கன்னு என்கூடவே அலைஞ்சு மேய்ஞ்சு வளர்ந்துச்சு. இன்னிக்கு என்கிட்ட இருக்குற எருமைகளெல்லாமே அதோட வாரிசுகள்தான்.
இப்போ மொத்தம் எட்டு ஈத்துவழி எருமைக, ஏழு கிடேரிக, ஒரு பொலிகாளைனு வெச்சுருக்கேன். இதில்லாம அப்பப்ப ஏகப்பட்ட எருமைகளை வித்துருக்கேன். ஒரேயரு எருமை கன்னுக்குட்டியிலதான் என்னோட வாழ்க்கை மேலே உசர ஆரம்பிச்சுது. வீடுகட்டி, பிள்ளைகளைப் படிக்க வெச்சு வெளிநாட்டு வேலைக்கு அனுப்பினு இன்னிக்கு வரைக்கும் என்னோட இந்த மொத்த வாழ்க்கையுமே அந்த ஒரு எருமை ஆரம்பிச்சு வெச்சதுதான்'' என்று தன் நினைவுகளை அசை போட்டவர், எருமை வளர்ப்புப் பற்றி சொன்னவற்றை தொகுத்திருக்கிறோம் பாடமாக!
மேய்ச்சல் நிலம்... தண்ணீர் அவசியம்!
''எருமை வளர்க்க கட்டாயம் மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும். அவை காலாற சுற்றி வந்து மேய்ந்து, வயிறு நிறைய சாப்பிட்டால்தான் நன்கு வளரும். காலையில் தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெள்ளாடு, பசுக்களைப் போல் இல்லாமல், ஒரே இடத்தில் நின்று கொண்டே செடிகளைச் சாப்பிடும். அந்த இடத்தில் தீர்ந்தால்தான் அடுத்த இடத்துக்குப் போகும். காலை பத்து மணியளவில் ஏதாவது குளம், குட்டையில் கொஞ்ச நேரம் இருக்கவிட வேண்டும். குளங்களில் தண்ணீர் இல்லாத சமயங்களில், பம்பு செட் மூலமாவது தண்ணீர் பாய்ச்சி எருமைகளைக் குளுமைப்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். அதிக வெயிலில் எருமைகளைக் கட்டிப் போடக் கூடாது. உச்சிவெயில் நேரங்களில், தானாகவே அவையெல்லாம் நிழலைத் தேடிப் போய் விடும்.
கொட்டகையெல்லாம் தேவையில்லை!
மதியம் மூன்று மணி வாக்கில் பால் கறந்துவிட்டு, மீண்டும் தண்ணீர் காட்டி மேயவிட வேண்டும். சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு அழைத்து வந்து மீண்டும் தண்ணீர் காட்டி கட்டி வைத்தால் போதும். இதற்காக தனிக் கொட்டகையெல்லாம் அமைக்க வேண்டியதில்லை. ஏதாவது மர நிழலில் கட்டி வைத்தால் போதும். மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் எருமைக்கு எந்த பாதிப்பும் வராது. இன்னும் சொல்லப் போனால், மழையில் நனைந்தால் பாலின் அளவு கூடும். இரவில் வைக்கோலைத் தீவனமாகக் கொடுக்கலாம். காலையில் மூன்று மணிவாக்கில் பால் கறந்து விடலாம்.
சினை மாட்டுக்கும், பால் கறக்கும் மாட்டுக்கும், தண்ணீர்த் தொட்டியில், கம்பு மாவு, சோளமாவு, புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை அதிகமாகக் கலந்துவிட வேண்டும். அதன் மூலம்தான் எருமை நன்கு பளபளப்பாகும், பாலின் அளவும் கூடும். பால் கறப்பதை நிறுத்தும் நிலையில் இருக்கும் மாட்டுக்கு, மேற்கண்ட தீவன அளவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
பருவம் சொல்லும் பல்!
எருமைகள் இரண்டு பல் முளைத்த பிறகுதான் பருவத்துக்கு வரும். சினைப் பருவத்துக்கு வந்த எருமைகள், கீழ் வரிசைப் பல்லைக் காட்டி கத்தும். விட்டு விட்டு சிறுநீர் கழிக்கும். இதை வைத்துக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் என்பதால், கூடவே ஒரு பொலி எருமைக் கிடாவையும் வளர்த்தால்... அது பருவத்துக்கு வந்த எருமைகளை விரட்டும். அதை வைத்து எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு நேரடியாகவோ, செயற்கை முறையிலோ கருவூட்டல் செய்து கொள்ளலாம். கன்று போட்ட மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் மீண்டும் எருமைகள் பருவத்துக்கு வரும்.
எருக்கு இலை பழுப்பதேன்... எருமைக் கன்று சாவதேன்?
கன்றுகள் பிறந்ததிலிருந்து நாற்பது நாட்கள் வரை வயிறாரப் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், கன்றுகள் இறந்துபோக வாய்ப்பிருக்கிறது. இதை மனதில் வைத்துதான் கிராமங்களில் 'எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?' என்று ஒரு விடுகதை போடுவார்கள். அதன் விடை 'பால் இல்லாமல்' என்பதாகும்.
பிறந்த அன்றே கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுப் பருவத்தில் முடியை மழித்துவிட வேண்டும். இல்லாவிடில் பேன் பிடித்து அரிப்பெடுக்கும். அரிப்பெடுத்த இடத்தை நக்கும்போது, முடி வயிற்றுக்குள் சென்று விடும். இதைச் சரியாகக் கடைபிடித்து விட்டால், கன்றுகளை இறப்பிலிருந்து தடுத்து விடலாம்.
தடுப்பூசிகள் அவசியம்!
எருமைக்குப் பெரும்பாலும் அதிகமாகக் காணை நோய்தான் வரும். காணை தாக்கினால், வாயிலும், கால் குளம்பிலும் புண் வந்து, எச்சில் ஒழுகும். தடுப்பூசி மூலம் காணை நோயைத் தவிர்க்கலாம். பால் முழுவதையும் கறந்தாலோ, அல்லது கன்று குடித்தாலோ மடி நோய் வரும். அதேபோல பால் கறப்பவர்கள் கைகளில் நகம் இருக்கக் கூடாது. சுத்தமாகக் கழுவியபின்தான் கறக்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து குறைவு காரணமாக, சமயங்களில் மாடு படுத்துக் கொண்டே இருக்கும். அதுமாதிரியான சமயங்களில் தெளிந்த சுண்ணாம்பு நீரைக் குடிநீரோடு கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுவிட வேண்டும்''
பரமாரிப்புக் குறிப்புகளைச் சொல்லி முடித்த கருப்பையா... ''கன்னு போட்டதுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஒரு நாளைக்கு ஒரு எருமை அதிகபட்சம் 10 லிட்டர் பால் கொடுக்கும். அடுத்த ரெண்டு மாசம் 3 லிட்டராகும். அடுத்த 3 மாசம் 5 லிட்டர் ஆகும். பாலின் அளவுல இப்படி ஏற்ற இறக்கம் இருக்கும். அதுக்கப்புறம் பால் வத்திடும். பசுந்தீவனம் நிறைய சாப்பிட்டா, பால் கூடும். கோடையில கொஞ்சம் கம்மியாத்தான் பால் கறக்கும்.எருமைப்பால் கொழுப்பு அதிகமா, கெட்டியா இருக்குறதாலதான் நல்ல விலை கிடைக்குது. எவ்வளவு வருமானம் வருதோ... அதுல பாதியை மாட்டுக்குச் செலவழிக்கணும்னு சொல்வாங்க. அதாவது, அந்தளவுக்கு தவிடு, புண்ணாக்கு வாங்கிப் போடணும்'' என்றவர்,
''எருமையைப் பொறுத்தவரைக்கும் பராமரிப்புக்காக ரொம்ப கவலைப்படத் தேவையில்ல. ஆனா, மேலே சொன்ன மாதிரி குறைந்தபட்ச விஷயங்களையெல்லாம் முறைப்படி பராமரிச்சோம்னா... எருமை மூலமாவே போதுமான லாபம் பார்க்கலாம்.

Tuesday 23 June 2015

ஒரே கல்லில் எக்கச்சக்கமான மாங்காய் ங்க..!

இயற்கை களைக்கொல்லி தயார்...
***********************************
நீண்ட பரிசோதனைக்கு பிறகு வெற்றி ..
இது விவசாயிகளுக்கு வரபிரசாதம் என்றுகூட சொல்லலாம்..
ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,
மனித உடலும் மலடாகிவிடுகிறது..
இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்தேன்..
முகநூலில் பல நண்பர்கள் மாட்டு கோமியம் தெளித்தால் களைச்செடி கருகி விடுகிறது என்று கூறினர்..
முயற்சித்தேன் களைமுளைவிடும் போது..
ஆனால் பலனலிக்கவில்லை..
சரி வெறும் கோமியம் மட்டும் தெளித்தால்
களை கருகாது என்று சிறிது கல் உப்பை சேர்த்தேன்..
களை கருகவில்லை..
எலுமிச்சபழத்தை சேர்த்தேன் பலனில்லை..
இதனுடன் வேப்பெண்ணெய் சேர்த்தேன் களைச்செடி கருகியது..
சரி என்று கடந்த மாதம் எனது வாழை காட்டில் தெளித்து பார்த்தேன்.
களைச்செடி கருகி வாழை கருகரு என்று வளர்ந்தது..
சரி இனி நாம் சின்ன டிராக்டரை விட்டு களைச்செடிகளை அழிக்க தேவை இல்லை என்று முடிவு செய்தேன்..
என்னிடம் இருப்பது இரண்டு நாட்டு மாடு..
பயிருக்கு உரத்தேவையை இந்த இரண்டு மாடுகளே பூர்த்தி செய்கிறது.
இது சராசரியாக தினமும் பத்து லிட்டர் கோமியம் கிடைப்பதே சிரமமாக இருந்தது
(12 மணி நேரத்தில்)
ஆனால் களைக்கொல்லிக்கு நாம் இந்த கோமியத்தை பயன்படுத்தினால் வாழைக்கு நீருடன் கலந்து விட பற்றாகுறை ஆகிவிடுமே என்று யோசித்தேன்..
தீவிரமாக யோசித்தேன்..
ஒரு யோசனை வந்தது..
நாம் ஏன் இந்த
வாழையின் பக்க கன்றுகளையும்,
வாழை பூவையும் மாட்டுக்கு போட்டால்
கோமியம் அதிகமாக கிடைக்குமே என்று ..
வீனாக போன பக்க கற்றுகளையும் வாழை பூவையும் மாட்டிற்கு போட்டேன் ..
கைமேல் பலன் கிடைத்தது.
சராசரியாக நாள் ஒன்றிற்கு இருபது லிட்டர் கோமியம் கிடைத்தது இரண்டு மாடுகளிடமிருந்து..
அப்படியே சேகரித்தேன் ஒரு மாதம்..
நானூறு லிட்டர் கோமியம் கிடைத்தது..
நிம்மதி பெருமூச்சு விட்டேன்..
செய்முறை விளக்கம்..
************************
நீர்கலக்காத மாட்டு கோமியம் ஒரு குடம் (பத்து லிட்டர்) ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு..
முளைத்த களைச்செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு ..
களைச்செடிகள் வளர்ந்திருந்தால் இரண்டு கிலோ கல் உப்பை பத்து லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும்..
பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்..
அதனுடன் வேப்ப எண்ணை நூறு மில்லியை
இதனுடன் ஊற்றி கலக்கவும்..
பிறகு வடிகட்டி கைத்தெளிப்பானில் களைச்செடிகள் மீது தெளிக்கவும்..
(பயிருக்கு படாமல்)
அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து களைச்செடிகளும் கருகிவிடும் பார்த்தீனிய உட்பட கோரை, அறுகம்புல் தவிர..
இந்த களைக்கொல்லி பயிருக்கு எந்த தீங்கும்
தருவதில்லை,
காரணம் கோமியம் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததது..
வேப்ப எண்ணை தொடர்ந்து பயன்படுத்தினால் கோரை கிழங்கு கூட அழிந்து விடும்..
கல் உப்பு ஒரு கிலோ என்பதால் மண்ணை பாதிப்பது இல்லை..
இதை நீங்கள் செய்ய குறைந்த செலவே ஆகிறது..
அந்த காலத்தில் வேப்பமரத்தில் செய்த கலப்பையை கொண்டு நம் பாட்டன் பூட்டன் உழுதததால் கோரை விவசாய பூமியில் இல்லாமல் போனது..
பச்சை புரட்சி என்ற பெயரில் மரக்கலப்பை இரும்பு கலப்பை ஆன பின்பே கோரைக்கிழுங்கு நம் பூமிக்குள் நுழைந்து விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை தந்தது..
ஒரு டேங்க் இயற்கை களைக்கொல்லி தயாரிக்க ஆகும் செலவு,
கல் உப்பு ஒரு கிலோ 3 ரூபாய்
எலுமிச்சை பழம் 3 ரூபாய்
வேப்ப எண்ணை
100Ml 12 ரூபாய்
***********
ஆக மொத்தம் 18 ரூபாய்
கோமியம் இல்லாமல் பதினெட்டு ரூபாயில்
களைகலை அழித்து விடலாம்
மண் எந்த விதத்திலும் பாதிக்காமல்..
இதுவே ரசாயன களைக்கொல்லியை பயன்படுத்தினால் ஒரு டேங்க்கிற்கு நாற்பது ரூபாய் செலாவதுடன் மண் மலடாகி
அதில் வாழும் உயிரனங்களும் அழிந்து விடும்..
இன்று மஞ்சள் நடவு செய்துள்ளேன்.
இன்னும் இரண்டு நாட்களில் இந்த களைக்கொல்லியை தெளிக்க போகிறேன்..
இயற்கை களைக்கொல்லி இருக்கும்போது
செயற்கை களைக்கொல்லியை பயன்படுத்தி
சொந்த செலவுல சூனியம் ஏங்க வைக்கனும்..!!?

Sunday 3 May 2015

காணாமல் போன கொளுஞ்சி ...



காணாமல் போன கொளுஞ்சி ...
கடந்த மாதம் நடவு செய்த செவ்வாழை கன்றுகளுக்கு இடையில் சாரனை அதிகமாக வந்துவிட்டது.
இன்று அந்த சாரனையை அப்படியே மடக்கி உழுது வாழைக்கு பசுந்தாள் உரமாக்கி விட்டேன்..
வழக்கமாக பலதானியங்களை மட்டுமே வாழைக்குள் நான் விதைப்பேன்..
ஆனால் இந்த முறை கொழுஞ்சியை விதைத்துள்ளேன்..
காரணம்
பலதானியம் விதைத்தால் அதை நாற்பது நாட்களுக்குள் மடக்கி உழவேண்டும்..
அப்படி மடக்கி உழவில்லை என்றால் அதில் பயன் ஏதும் இருக்காது..
இப்போது வெயில் காலம் என்பதால் பலதானியம் விதைத்தால் சரியாக அக்னி நட்சத்திர வெயிலில் நான் அதை மடக்கி உழ வேண்டியது வரும்.
அந்த கடும் வெயிலலில் உழும் போது கண்டீப்பாக வாழைக்கன்றுகள் பாதிக்கும்..
ஆனால் இந்த கொளுஞ்சி அப்படி அல்ல..
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரையில் வளர்த்து அதற்கு பிறகு மடக்கி உழுது எருவாக்கி விடலாம்..
நிலமும் நன்றாக இழகிவிடும்..
அதே சமயம் இந்த கொளுஞ்சியிலிருந்து வரும் விதைகள் குறைந்தது பத்து ஆண்டுகள் வரையில் நம் நிலத்தில் தொடர்ந்து முளைத்துக்கொண்டே இருக்கும்..
அப்படி முளைத்துக்கொண்டே இருந்தால் களைகளையும் கட்டுப்படுத்தி விடலாம்..
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கொளுஞ்சியை தரிசாக கிடக்கும் நிலத்தில் இடம் இல்லாமல் முளைத்து கிடக்கும்..
பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கொழுஞ்சியை அறுத்து மிதி வண்டியில் வைத்து கொண்டுவந்து வயல்களில் போட்டு மிதித்து விடுவோம்..
அதுவொரு பசுமைக்காலம்..!
ஆனால் இந்த ரசாயன களைக்கொல்லிகள் வந்த பிறகு களைகள் அழிந்ததோ இல்லையோ இந்த கொளுஞ்சி முற்றிலும் அழிந்து விட்டது..
வளர்க்க படவேண்டியது அழிக்கப்பட்டது.! (கொழுஞ்சி)
அழிக்கப்படவேண்டியது வளர்க்கபடுகிறது.!! (பார்த்தீனியம் விஷச்செடி)
கொளுஞ்சியை(திட்டமிட்டு) அழித்த பெருமை பசுமை புரட்சியாளைர்களயே சாரும்..!
வாழ்க கொழுஞ்சி..!
ஒழிக ரசாயன களைக்கொல்லிகள்..!!

Monday 2 March 2015

வெள்ளாடு வளர்ப்பு – பொதுக் குறிப்புகள் மற்றும் வளர்ப்பு முறைகள்

திட்டமிட்டு வெள்ளாடு வளர்க்கத் தொடங்குபவருக்கு, விலங்கினங்கள் மீது ஒரு பாசமும், ஆர்வமும் இருக்க வேண்டும். இது ஓர் அடிப்படைத் தேவை எனலாம். வெள்ளாடுகள் நம்மைப்போல் உயிருள்ளவை. ஆகவே, அவற்றின் மீது அக்கறை காட்டினால்தான் அவை சிறக்கும். அதக் காரணமாக அதிக வருவாய் பெற முடியும். அடுத்து, அதிக அளவில் நல்ல முறையில் வெள்ளாடு வளர்ப்பவருக்குத் தேவையான நிலமும், முதலீடும் தேவை. அடுத்தபடியாக ஓரளவு வெள்ளாட்டுப்பால் விற்பனைக்கும் ஏற்பாடு செய்து கொள்ளுவது நல்லது. ஏனெனில் இறைச்சிக்காக ஆடுகள் விற்பது எளிதானது. ஆனால், ஆட்டுப்பால் விற்பனை செய்ய சிறப்பான விளம்பரம் தேவை.
நல்ல பண்ணை அமைய நல்ல தரமான ஆடுகள் தேவை. நமது இன்றைய இறைச்சித் தேவை கருதி இறைச்சிக்கான வெள்ளாடுகள் வளர்ப்பதே சிறந்தது. நமது நாட்டு ஆடுகள் நல்ல இறைச்சி வழங்குபவை. ஆனால் வளர்ச்சி வீதம் குறைவு. அத்துடன் கொடுக்கும் பால் அளவு குறைவு. ஆகவே இவ்விரு குணநலன்களைக் கூட்ட, நாட்டு ஆடுகளை நம் நாட்டின் சிறந்த இனங்களுடன் இணைத்துக் கலப்பின உற்பத்தி செய்து வளர்க்கலாம்.
எளிதானது. ஆனால், ஆட்டுப்பால் விற்பனை செய்ய சிறப்பான விளம்பரம் தேவை.
நல்ல பண்ணை அமைய நல்ல தரமான ஆடுகள் தேவை. நமது இன்றைய இறைச்சித் தேவை கருதி இறைச்சிக்கான வெள்ளாடுகள் வளர்ப்பதே சிறந்தது. நமது நாட்டு ஆடுகள் நல்ல இறைச்சி வழங்குபவை. ஆனால் வளர்ச்சி வீதம் குறைவு. அத்துடன் கொடுக்கும் பால் அளவு குறைவு. ஆகவே இவ்விரு குணநலன்களைக் கூட்ட, நாட்டு ஆடுகளை நம் நாட்டின் சிறந்த இனங்களுடன் இணைத்துக் கலப்பின உற்பத்தி செய்து வளர்க்கலாம். இது குறித்து இனச்சேர்க்கை என்னும் பகுதியில் விரிவாக விவாதிக்கலாம்.
வெள்ளாடுகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
இளம் ஆடுகளையே வாங்க வேண்டும். நல்ல ஆடுகள் பத்து ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும். இளம் ஆடுகளைத் தேர்ந்தெடுக்கப் பல் பார்த்து வாங்க வேண்டும். பல் அடிப்படையில் வயது நிர்ணயிப்பது.
3 மாத வயது வரை — பால் பல்
1 1/2 வயது வரை — 2 பல்
2 வயது வரை — 4 பல்
3 வயது வரை — 6 பல்
4 வயது வரை — 8 பல்
வெள்ளாட்டுக் குட்டிகள் பிறக்கும் போதே, முன் தாடையில் ஆறு வெட்டும் பற்கள் இருக்கும். ஆனால் கன்றுகளுக்கு இரண்டு பற்கள் மட்டுமே உண்டு.
இரண்டு பல் வயதுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்ததாகும்.
ஆடுகளை வாரச் சந்தையில் வாங்குவதைவிச் சிறந்த பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அதுவும் நோய்த் தாக்குதல் அறடற பண்ணைகளிலிருந்து வாங்குவது நல்லது. அருகே பண்ணைகள் இல்லாத சூழ்நிலையில் சில ஆடு வளர்ப்பவர்களிடம் வாங்கிச் சேர்க்கலாம்.
பல குட்டிகள் போடும் ஆடுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தாய் ஆடு, 3-4 குட்டிகள் போட்டால், அதன் பெண் குட்டியும் அவ்வாறே பல குட்டிகள் ஈனும். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் 3-4 குட்டிகள் ஈனும் ஆடுகளை வளர்ப்போர் சில ஊர்களில் இருக்கின்றார்கள். இவற்றைத் தேடி வாங்கலாம். இப்படி நான் வாங்கிய ஆடு முதல் ஈற்றில் மூன்று குட்டியைத் தாங்கியது.
போட்ட குட்டிகளைக் காக்கவும், வளர்ப்போருக்குச் சிறிது பால் கொடுக்கவும் ஏற்றதாக, நன்கு பால் வழங்கும் திறனுடைய பெட்டையாடாக இருக்க வேண்டும். நன்கு திரண்ட வளர்ச்சியடைந்த மடியுள்ள ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மடியில் பாதிப்புள்ளதா என்பதை நன்கு ஆய்வு செய்து வாங்க வேண்டும்.
மிருதுவான, பளபளப்பான தோல் கொண்ட ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது ஆட்டின் உடல் நலத்தைக் காட்டும்.
சுறுசுறுப்புடன் அகன்ற ஒளியுடன் கூடிய கண்களை உடைய ஆடுகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுவும் ஆட்டின் நலத்தைக் காட்டுவதே.
முதுகுப் புறமும், பின் பகுதியும், அகன்று விரிந்து இருக்கும் ஆடுகள் சிறந்தவை. அகன்ற முதுகுப் புறமும் விலா எலும்பும் அதிக தீவனத்தை எடுக்கும் தன்மையையும், அகன்ற பின்புறம் சிறந்த இனப் பெருக்கக் குணத்தையும் காட்டுவனவாகும்.
புதிதாக வாங்கிய வெள்ளாடுகளை உடனடியாக மற்ற ஆடுகளுடன் சேர்க்கக் கூடாது. ஆடுகளை ஒதுக்கி வைத்து, அப்பகுதியில் உள்ள தொற்று நோய்களுக்கு எதிராகத் தடுப்பூசி போட வேண்டும். இத்துடன் உடலில் உள்ள உண்ணி, பேன், தெள்ளுப் பூச்சிகளை ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும். பிறகு, குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இவையாவும் முடிந்த பின்பே பண்ணையிலுள்ள மற்ற ஆடுகளுடன் சேர்க்க வேண்டும்.
வெள்ளாடு வளர்ப்பு முறைகள் குறித்து எழுதுமுன் வெள்ளாடுகளின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுவது நல்லது.
வெள்ளாடுகளுக்கு, அசைகின்ற வலுவான மேலுதடும், திறனுள்ள நாக்கும் உள்ளதால், முட்செடி, சுள்ளி, மரங்களின் பட்டைகள் ஆகியவற்றைக் கடித்துத் தின்ன முடியும்.
வெள்ளாடுகள் செடி, கொடிகளைக் கொய்து தின்னும் குணமுடையன. இவை செம்மறி ஆடுகளைப் போன்று குனிற்து புற்களை மேயுத் தன்மையுடையதல்ல.
செம்மறி ஆடுகளைப் போல், வெள்ளாடுகள் சேர்த்து மேயா. தனித்தனியாகப் பிரித்து சென்று மேயும். அருகிலுள்ள தன்னைச் சேர்ந்த வெள்ளாடுகளைக் கண்ணால் பார்க்காமல், மூக்கால் மோந்து கண்டு கொள்ளும்.
செம்மறி ஆடுகளைப் போன்று, வெள்ளாடுகளை ஓட்டிச் செல்ல முடியாது. மாறாக அவற்றை நடத்திச் செல்ல வேண்டும்.
வெள்ளாடுகள், நெருக்கடியால் சங்கடப்படுவது போலத் தனிமைப் படுத்தினாலும் பாதிக்கபடும். தனியாக ஓர் ஆட்டை வளர்ப்பது சிறந்ததன்று.
வெள்ளாடுகளுக்கு மிக மெல்லிய தோல் உள்ளதாலும், தோலுக்கு அடியில் கொழுப்பு இல்லாததாலும், குளிர், மழையை அதிகம் அவை தாங்கா. மழை பெய்ய ஆரம்பித்தால், வெள்ளாடு ஓடி ஒதுக்குப் புறத்தைத் தேடுவதைக் காணலாம். மேலும் வெள்ளாடுகள் வெப்ப நாடுகளில் நன்கு செழித்து வளரும்.
செம்மறி ஆடுகளுக்கு அதன் கூட்டமே அதற்குப் பாதுகாப்பு எதிரியைக் கண்டால் கத்தாமல் நின்று விடும். வெள்ளாடு, அங்கும் இங்கும் ஓடிக் கத்தி ஓலமிடும்

வெள்ளாடுகளுக்கு ஏற்ற புற்கள் மற்றும் மொச்சையினப் பயிர்கள்

வெள்ளாடுகளை அதிக அளவில் வளர்க்கும்போது மரத்தழைகள் மட்டுமின்றிப் புற்களையும் மொச்சையினப் பயிர்களையும் வளர்த்துத் தீவனமாக அளிக்க வேண்டும். இது மிக இன்றியமையாதது. ஆகவே, இவை குறித்தும் விவாதிக்கலாம். இது குறித்து அலமாதி தீவன உற்பத்தி நிலைய விபரங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
கோ- 1 கலப்பின நேப்பியர் புல் நமது நாட்டிற்கு ஏற்ற மிகச் சிறந்த புல் வகை ஆகும் இது. இது ஒரு எக்டேரில் 20,000 கிலோ ஓராண்டில் உற்பத்தியாகும். இவ்வகைப் புல்லைச் சிறிது சிறிதாக நறுக்கி, வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்க வேண்டும். பெரிய பண்ணையாளர்கள் தட்டை வெட்டும் கருவியைக் (Chaff Cutter) கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் தட்டை வெட்டும் கருவியையும் பல பண்ணையாளர்கள் வைத்துள்ளார்கள். தற்போது கோ-2 ரக புல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 33% அதிக மகசூல் கொடுக்கக்கூடியது.சாகுபடிக் குறிப்புகள்
எக்டேருக்கு 30,000 புல் துணுக்குகள் தேவைப்படும். 30-75 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்துப் புல் துணுக்குகளை நட வேண்டும். 150 கிலோ தழைச் சத்தும், 60 கிலோ மணிச் சத்தும் ஒரு எக்டேர் பயிருக்குத் தேவை. இப்புல்லுக்குத் தொடர்ந்து நீர் அளிப்பது தேவை. ஆகவே, நல்ல பாசன வசதிக்கு ஏற்ற இறைவை இயந்திரம் அவசியம். மழைக் காலத்தில் மழைக் காலத்தில் மழை பெய்யும் சூழ்நிலையைப் பொறுத்து, 15-20 நாளுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சலாம். கோடைக் காலத்தில் 8-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
நட்ட 60 முதல் 75 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். இவ்வாறாக, ஆண்டிற்கு 5 முதல் 6 முறை அறுவடை செய்து 150 முதல் 200 டன் பசும்புல் பெறலாம். இதில் புரதம் 8% உள்ளது.
இப்புல்லுக்கு இடையே ஊடுபயிராக மொச்சையினச் செடிகளையும் பயிரிடலாம்.
கினிபுல் – அமில்வகை (Guinea Grass – Hamil)இதுவும் ஒரு சிறந்த புல் வகையே. இது ஓரளவு நிழலைத் தாங்குவதால், தென்னந்தோப்பு, வாழைத் தோட்டங்களில் பயிரிடலாம்.இதனைப் புல் துணுக்குகளாகவோ, விதை மூலமாகவோ பயிரிடலாம். எக்டேருக்கு 30-35,000 புல் துணுக்குகள் அல்லது 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகின்றன. வரிசைக்கு 45 முதல் 60 செ.மீ., இடைவெளி தேவை. 50 முதல் 60 நாட்களில் முதல் அறுவடையும், பின் 40-45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 100 முதல் 150 டன் வரை ஓராண்டில் கிடைக்கும் இப்புல்லில் புரதம் 7% அடங்கியுள்ளது.
எருமைப்புல் (Para Grass)இது வெள்ளாடுகளுக்கு ஏற்ற சிறிய வகைப் புல். பொதுவாகச் சாக்கடைக் கழிவு நீர் மூலம் பல நகராட்சிகளில் இது பயிரிடப்படுகின்றது.45-60 செ.மீ., இடைவெளிவிட்டு வரிசையாக நடலாம். புல் துணுக்குகள் மூலமே பயிரிட வேண்டும். உர அளவு கோ-1 போன்றே. இதற்கு அதிக நீர் தேவை. 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மழைக் காலத்திலும், 8-10 நாட்களுக்கு ஒரு முறை கோடைக் காலத்திலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
முதல் அறுவடை 75 முதல் 80 நாட்களிலும், பின் 40 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு ஒரு எக்டேரில் 80 முதல் 100 டன் புல் கிடைக்கும். இதில் அடங்கியுள்ள புரத அளவு 7% ஆகும்.
மொச்சையினப் பயிர்கள்
குதிரை மசால் (Lucerne)இது மிகச் சிறந்த பசுந்தீவனமாகும். இதனைப் பசுமையாகவும், காயவைத்தும் ஆடுகளுக்கு அளிக்கலாம். ஆனால் குதிரை மசால் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நன்கு வளர்வதில்லை. கோவை, பெரியார், சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில பகுதிகளில் குதிரை மசால் பலன் கொடுக்கின்றது. மற்ற மாவட்டங்களில் இது பயிரிட ஏற்றதில்லை. இது ஒரு பல்லாண்டுப் பயிர்.இதை விதைக்க ஏற்ற காலம் அக்டோபர் – நவம்பர் மாதமாகும். ஒரு எக்டேருக்கு 15 முதல் 20 கிலோ விதை தேவைப்படும். இதனை 20-25 செ.மீ., இடைவெளியில் வரிசையாகப் பயிரிடலாம். அல்லது தூவி விதைத்து விடலாம்.
வாரம் ஒரு முறை முதல் கட்டாயமாகவும், பின் 10-12 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். தழைச் சத்து 30 கிலோ, மணிச் சத்து 100 கிலோ தேவை.
70 நாட்களுக்குப் பின் முதலட அறுவடையும், பின் 25-30 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். ஆண்டில் 6 முதல் 7 தடவை அறுவடை செய்து, 60 முதல் 70 டன் பசுந்தீவனம் பெறலாம். புரதம் 20% அளவில் இப்புல்லில் உள்ளது.
ஸ்டைலோ (Stylosanthes)இப்பயிரைக் குதிரை மசால் பயிரிட முடியாத மற்ற இடங்களில் பயிரிடலாம். ஒரு எக்டேருக்கு 20-25 கிலோ விதை தேவைப்படும்.வரிசைக்கிடையே 30 செ.மீ., இடைவெளி கொடுக்க வேண்டும். தழைச் சத்து 30 கிலோவும், மணிச் சத்து 60 கிலோவும் தேவை. கோடையிவ் 20-30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.


முதல் அறுவடை 65-70 நாட்களிலும், பின் 35-45 நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம்.
ஆண்டில் 3 முதல் 5 முறை அறுவடை செய்து 30 முதல் 35 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லில் புரதம் 18-20% அளவில் உள்ளது.
வேலிமசால் (Hedge Lucerne)இது வெள்ளாடுகளுக்கு ஒரு சிறந்த பசுந் தீவனப் பயிராகும். இதைத் தென்னந்தோப்பு, வாழைத் தோட்ட ஓரங்களிலும் பயிரிடலாம். தனிப்பயிராக எக்டேருக்கு 10 கிலோ விதை தேவைப்படும். 1 மீட்டர் இடைவெளி விட்டு, அடுத்த வரிசை விதை போட வேண்டும்.30 கிலோ தழைச் சத்தும், 50 கிலோ மணிச் சத்தும் தேவை. கோடையில், 20 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 1/2 முதல் 1 மீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். பயிர் செய்த 4 மாத வயதில் முதல் அறுவடைக்குத் தயாராகும். பின் 1 முதல் 1 1/2 மாத இடைவெளியில், அறுவடை செய்யலாம். ஆண்டிற்கு 6 முதல் 7 முறை அறுவடை செய்து 18 முதல் 20 டன் பசுந்தழை பெறலாம். இப்புல்லின் புரத அளவு 18 – 20% ஆகும்.
இதனை கோ-1 மற்றும் கினி புல்லுடன் ஊடு பயிராகவும் பயிரிடலாம். இதனால் ஒன்றுன்கொன்று உதவி செய்து, அதிக மகசூல் பெற முடியும்.
இது தவிரச் சணப்புப் பயிரை நெல் அறுவடைக்குப் பின் பயிரிட்டு ஆடுகளுக்குப் பசுந்தழையாகவும், காய்ந்த தீவனமாகவும் அளிக்கலாம்.
இதுபோல் தட்டைப் பயற்றை மழைக்குப்பின் புஞ்சை நிலங்களில் விதைத்து ஆடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். தவிரவும், பயிர் செய்ய பயனற்ற தரிசு நிலங்களில் கொழுக்கட்டை (Buffel Grass) அல்லது மலை அருகம்புல் (Rhodes Grass) விதைக்கலாம். சுற்றி வேலிக்கருவை நட்டுக் காக்கலாம்.
ஒரு ஏக்கல் நிலத்தில் பசும்புல்லையும், துவரை இனத் தீவனத்தையும் வளர்த்தால், 30 ஆடுகளையும் அதன் குட்டிகளையும் வளர்க்க முடியும். குறிப்பிட்டுச் சொல்லுவதானால், கோ-1 புல், வேலிமசால் ஆகியவற்றை ஓர் ஏக்கரில் பயிரிட்டுச் சுற்றிலும் அகத்தி, சித்தகத்தி மரம் நட்டுத் தேவையான பசுந்தழை பெற்று, 30 வெள்ளாடுகளைப் பேண முடியும். இந்த ஆடுகள் வழங்கும் எரு நிலத்திற்கும் பயன்படும்.
வெள்ளாடுகளுக்கென்றே உள்ள சிறந்த தீவன மரங்களாவன:
கொடுக்காய்புளி
கருவேல்
வெள்வேல்
உடை (குடைவேல்)
கிளுவை
கொடுக்காய்புளி மரப் பழங்களைப் பலர் விரும்பி உண்பார்கள். அதன் தழைகளில் முள் இருந்தாலும், வெள்ளாடுகள் விரும்பி, ஏன் முள்ளையும் சேர்த்தே உண்டுவிடும்.
கருவேல், வெள்வேல், குடைவேல் முதலான மரங்கள் விறகிற்காக வளர்க்கப்படுகின்றன. இதன் தழையையும், வெள்ளாடுகள் விரும்பி உண்ணும். அத்துடன் இம்மர நெற்றுகள் ஆடுகளுக்குச் சிறந்த தீவனமாகும். பலர் இந்நெற்றுகளைச் சேமித்துத் தீவனப் பற்றாக்குறைக் காலங்களில், ஆடுகளுக்குக் கொடுப்பார்கள். இதில் புரதம் நிறைய உள்ளது. சீமைக் கருவேல் நெற்றுத் தீவனமாகும்.
மேலும் கிளுவை மரங்களை வேலிகளில் வளர்ப்பார்கள். இதன் தழையையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.
வெள்ளாடுகள் அவை வளர்க்கப்படும் பகுதியில் உள்ள பல்வகைத் தழைகளை உண்ணப் பழகிக் கொள்ளும். உதாரணமாகச் சவுக்குப் பயிரிடப்படும் பகுதியில் சவுக்குத் தழையை உண்ணும். மைகொன்னை எனப்படும் மரத்தழையையும், சில வெள்ளாடுகள் உண்கின்றன.