Sunday 3 May 2015

காணாமல் போன கொளுஞ்சி ...



காணாமல் போன கொளுஞ்சி ...
கடந்த மாதம் நடவு செய்த செவ்வாழை கன்றுகளுக்கு இடையில் சாரனை அதிகமாக வந்துவிட்டது.
இன்று அந்த சாரனையை அப்படியே மடக்கி உழுது வாழைக்கு பசுந்தாள் உரமாக்கி விட்டேன்..
வழக்கமாக பலதானியங்களை மட்டுமே வாழைக்குள் நான் விதைப்பேன்..
ஆனால் இந்த முறை கொழுஞ்சியை விதைத்துள்ளேன்..
காரணம்
பலதானியம் விதைத்தால் அதை நாற்பது நாட்களுக்குள் மடக்கி உழவேண்டும்..
அப்படி மடக்கி உழவில்லை என்றால் அதில் பயன் ஏதும் இருக்காது..
இப்போது வெயில் காலம் என்பதால் பலதானியம் விதைத்தால் சரியாக அக்னி நட்சத்திர வெயிலில் நான் அதை மடக்கி உழ வேண்டியது வரும்.
அந்த கடும் வெயிலலில் உழும் போது கண்டீப்பாக வாழைக்கன்றுகள் பாதிக்கும்..
ஆனால் இந்த கொளுஞ்சி அப்படி அல்ல..
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரையில் வளர்த்து அதற்கு பிறகு மடக்கி உழுது எருவாக்கி விடலாம்..
நிலமும் நன்றாக இழகிவிடும்..
அதே சமயம் இந்த கொளுஞ்சியிலிருந்து வரும் விதைகள் குறைந்தது பத்து ஆண்டுகள் வரையில் நம் நிலத்தில் தொடர்ந்து முளைத்துக்கொண்டே இருக்கும்..
அப்படி முளைத்துக்கொண்டே இருந்தால் களைகளையும் கட்டுப்படுத்தி விடலாம்..
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கொளுஞ்சியை தரிசாக கிடக்கும் நிலத்தில் இடம் இல்லாமல் முளைத்து கிடக்கும்..
பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கொழுஞ்சியை அறுத்து மிதி வண்டியில் வைத்து கொண்டுவந்து வயல்களில் போட்டு மிதித்து விடுவோம்..
அதுவொரு பசுமைக்காலம்..!
ஆனால் இந்த ரசாயன களைக்கொல்லிகள் வந்த பிறகு களைகள் அழிந்ததோ இல்லையோ இந்த கொளுஞ்சி முற்றிலும் அழிந்து விட்டது..
வளர்க்க படவேண்டியது அழிக்கப்பட்டது.! (கொழுஞ்சி)
அழிக்கப்படவேண்டியது வளர்க்கபடுகிறது.!! (பார்த்தீனியம் விஷச்செடி)
கொளுஞ்சியை(திட்டமிட்டு) அழித்த பெருமை பசுமை புரட்சியாளைர்களயே சாரும்..!
வாழ்க கொழுஞ்சி..!
ஒழிக ரசாயன களைக்கொல்லிகள்..!!

4 comments:

  1. ஐயா வணக்கம் , எனக்கு கொழுன்சி தாவரத்தின் விதைகள் வேண்டும் ... 7667668091

    ReplyDelete
  2. கொளுஞ்சி. Can you please show me the photos of this plant?

    ReplyDelete
  3. கொழுஞ்சி விதைகள் கிடைக்கும் இடம் தெரிவிக்கப்பட்டால் நலமாயிருக்கும்.

    ReplyDelete
  4. கொளுஞ்சி விதைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

    ReplyDelete