Tuesday 3 December 2013

ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இந்த வகையான தீவனதில் எதாவது மூன்று கண்டிப்பாக தயார் செய்வது கட்டாயம்





உலர் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் தாது உப்புகளின் அளவு அதிகமாக இருக்கிறது.

பசுந்தீவனத்தை உலர் தீவனங்களுடன் சேர்த்து தரும்போது உலர்தீவனங்களின் உட்கொள்ளும் அளவு மற்றும் அவற்றின் செரிமானத் தனமை அதிகரிக்கிறது. வகைகள் -- தானிய வகை, புல் வகை, பயறுவகை, மர வகை.

தானிய வகை

சோளம், கம்பு மற்றும் மக்காசோளம்

அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை

புல் வகை

கினியாப் புல், கம்பு நெப்பியர் ஒட்டுப்புல் ( கோ-1,கோ-2,
கோ-3 மற்றும் கோ-4), நீர்ப்புல் ( எருமைப் புல்), கொழுக்கட்டைபுல்,
ஈட்டிப்புல், மற்றும் மயில் கொண்டைப்புல்.

அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை

பயறு வகை

வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு.

அதிக புரதமும் சுண்ணாம்பு சத்தும் கொண்டவை.

மர வகை

அகத்தி, சூபாபுல் ( சவுண்டல் ), கிளிரிச்சிடியா, கருவேல், வெல்வேல்,
ஆச்சா மற்றும் வேம்பு

நடுத்தரமான புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.

அளிக்கும் முறை

பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை
1 பங்கும் கொடுக்க வேண்டும் .

இவ்வாறு அளிக்கும்போஆடுகளுக்கு து புரதம் மற்றும் மாவு சத்துகள்
சரியான விகிதத்தில் கிடைக்கும்

No comments:

Post a Comment