Saturday, 29 November 2014

Desi Cow Benefits

Desi Cow Benefits
Desi Cow’s Agriculture Benefit.
Desi Cow – Indian Breeds of Cows are called as Gaumatha, Kamadhenu, Lakshmi etc., by the people living in the Great Bharath. We consider Desi Cow as our Mother and worship the same.
Why it is so important to us?
Desi Cow gives us the entire requirement of our farming activities in Agriculture. It helps us in transportation of our goods. It works in our agricultural lands. Thus the food we consume is because of the help of this mother cow. It gives us the medicine for our health. It saves the crop from pest, insect and fungi. Finally it becomes a part of our family.For giving all the above; what we are giving. We are giving all the unwanted items for humans such as grass, stray etc, after taking the oil from cotton seeds, ground nuts, coconut and the remaining thing is given to the cow.In case this is not required for cow, for human being it is a waste and in fact we have to spend money to dispose this. Thus an environment recycle is done with the help of cow.
The significant features of Indian Cows;
• Hump of the Shoulder
• Long Ears;
• In the neck the skin will be hanging.
• Suryaketu nerve on the back, It is believed that Suryaketu nerve absorbs medicinal essences from atmosphere and makes milk, urine and cow dung more nourishing.
• The ability to shake only a particular part of the body, for example it can shake only the skin the stomach area without shaking the other part of the body.
• It can withstand the climatic conditions of this country, either hot, rain or cold.
• It delivers around 15 to 20 calf’s in his life span.
• It can walk for more kilometers and work hard accepting the climatic conditions of this part of the world.
• A cow in its lifespan feeds thousands of people, and one cow is sufficient to do farming in 10 acres of land


A1 and A2 Milk
The National Bureau of Animal Genetic Research has recently demonstrated the superior milk quality of Indian cattle breeds.After scanning 22 cattle breeds, scientists concluded that in five high milk-yielding native breeds – Red Sindhi, Sahiwal, Tharparkar, Rathi andGir – the status of A2 allele of the beta casein gene was 100 per cent. In other Indian breeds it was around 94 per cent, compared to only 60 per cent in exotic breeds like Jersey and HF.The A2 allele is responsible for making available more Omega-6 fatty acids in milk. The pure Indian breed desi cow produces A2 milk, which contains less Betacosmophorine-7 (BCM-7), as opposed to the hybrid cows which generally produce A1 milk.
Benefits of Desi Cow Milk and Ghee
• •As per Ayurvedic tradition, Cow Ghee helps in the growth and development of Children’s brain
• Regular consumption increases good (HDL) cholesterol (and not bad LDL cholesterol)
• Stimulates digestion and aids absorption of fat soluble vitamins
• An excellent all round anti-ageing vegetarian food & external applicant on the skin
• Desi Cow milk is like nectar, because it has amino acids which make its protein easily digestible
• It is good for kidney
• It is a rich source of Vitamins like B2, B3 and A which help increasing immunity
• Cow Milk helps in reducing acidity, (a common problem today)
• Reduces chances of peptic ulcer
• Helps in reducing chances of colon, breast and skin cancer
• Desi Cow milk prevents the formation of serum cholesterol
• It is one of the best natural anti-oxidants
• After mother’s milk, it is only the cow’s milk which gives energy and full protection and is Digestible
Contents of Cows Milk
• 100gms of Cows Milk contains:
• Phosphorous 0.93 gms -> Energy release for metabolic activity and physical activity
• Calcium 1.20gm -> Healthy bones and Teeth
• Iron 0.002 gm ->
• Magnesium -> for muscle function and elements Vanadium, chromium, tin, aluminum, abhrak and sisa.
• It has 25 types of minerals and Vitamins as:
• Vitamin B12 – for production of healthy cells
• Vitamin A – for good eyesight and immune function
• Zinc – for immune function
• Riboflavin – for healthy skin
• Folate – for production of healthy cells
• Vitamin C – for formation of healthy connective tissues
• Iodine – for regulation of the body’s rate of metabolism
• Charaka Samhita, the ancient text on Indian Medicine, strongly recommends the use of Desi Cow products for the treatment of various ailments.
Desi Cow Byproducts:
We produce organic fertilizers, pesticides, fungicides, insecticides from Desi Cow’s dung and urine for our agriculture requirement. The fertilizers from Desi Cow’s bi-products will have all the essential requirement of the Agriculture and the crop. The Fertilizer is called as Panchagavya and the Pesticides / Insecticides / Fungicides is called as Agnihastra.

Tuesday, 25 November 2014

மாடுகளுக்கு வரும் மடிநோய் - நோய் இன்றி பாதுகாக்கலாம்!

மாடுகளுக்கு வரும் மடிநோய்க்கு மருந்து கண்டுபிடித்து, ஜனாதிபதி விருது பெற்ற சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தன்: கடந்த, 30 ஆண்டுகளாக பால் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். என்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. எங்க அப்பா, தாத்தா எல்லாருமே பால் கறக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள். அதனால், பசுக்களை எப்படி அணுக வேண்டும் என, சிறு வயதிலேயே கற்றுக் கொண்டேன்.
பொதுவாக, மாடுகளுக்கு வயிற்றுப்போக்கு, எழுந்திருக்க முடியாமல் இருக்கும் குந்துநோய், பறவைகள் கொத்தினால் வரும் புண், கால்களில் ஏற்படும் புண் போன்ற பல நோய்கள் வந்தாலும், மாடுகளை அதிகமா தாக்கக்கூடியது மடிநோய் தான். இந்த நோய் பெரும்பாலும், அதிகமாக பால் கொடுக்கக்கூடிய, மடி பெரிதாக உள்ள மாடுகளைத் தான் குறிவைத்து தாக்குகிறது.
இந்த நோய் எதனால் வருகிறது என்பது தெரியவில்லை. நாம் சாப்பிடும் உளுந்து, சாப்பாடு போன்ற உணவுகளை, பசுக்களுக்குக் கொடுத்தாலும் மடிநோய் வரும். மடிநோய் வந்தாலே, பசுவோட நான்கு காம்புகளும் வெவ்வேறு விதமாக மாறிவிடும்.
ஒரு காம்பில் பால் வரும்; இன்னொரு காம்பு வீக்கமாக இருக்கும்; மற்றொரு காம்பில், ரோஸ் கலரில் பால் வரும்; நாலாவது காம்பில் ரத்தமே வர ஆரம்பிச்சிடும். மடியும் வீங்கிக் காணப்படும். இதெல்லாம் மடிநோய்க்கான அறிகுறிகள். தினமும், 60 பசுக்களுக்கு மேல பால் கறப்பதால், பசுக்கள் என்னென்ன நோய்களால் பாதிக்கப்படும் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன். மடிநோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்தேன். நான் கண்டுபிடித்த மருத்துக்கு, பணமே செலவாகாது. சுற்றுப்புறங்களில் முளைக்கும் வேலிப்பறித்தழை, எருக்கம்பால், சுண்ணாம்பு இந்த மூன்றையும் கசக்கி, காலை, மாலை என, இரண்டு வேளை மாட்டின் மடியில் தடவி வந்தாலே போதும்.
வீக்கம் குறைய ஆரம்பித்து விடும். அந்த வீக்கத்தில் கெட்ட பால்கள் தங்கியிருக்கும். அதை மூன்று நாட்களுக்கு கறந்து சுத்தப்படுத்திய பின், வழக்கம் போல பால் கறக்கலாம். இந்த இயற்கை மருந்தை, கடந்த அஞ்சு வருஷத்துக்கு மேலாக, சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் இலவசமாகவே வாங்கிட்டுப் போய் பயன் படுத்துகின்றனர்.
அதுமட்டுமல்ல, செல்போனில் அழைத்தாலும் நேரில் சென்று, மருந்தை எப்படி மாட்டுக்கு தடவணும், மடிநோயை எப்படிக் குணப்படுத்தலாம் என்ற ஆலோசனையையும் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். இதுவரை, 500க்கும் மேற்பட்ட மாடுகளை, என் மருந்தால் குணப்
படுத்தியிருக்கேன்.
மாடுகளை, விஷ ஜந்துக்கள் கடித்தாலும், அந்தந்தக் கடிக்கான மூலிகைச் செடிகள் என்னிடம் உள்ளன. ஒரு போன் பண்ணிக் கேட்டாலே போதும். என்ன மருந்து கொடுக்க வேண்டும் என, போனிலேயே சொல்லிடுவேன்.தொடர்புக்கு: 93642 22098

Sunday, 23 November 2014

இந்திய பூர்வீக மாடுகளின் வகை மற்றும் அவை காணப்படும் மாநிலம்:

1) அமிர்த மகால் -கர்நாடகா

2) பச்சூர் – பிகார்

3) பர்கூர் – தமிழ்நாடு

4) தாங்கி – மகாராஷ்டிரா

5) தியோனி – மகாராஷ்டிரா

6) கவொலாவோ – மகா

7) கீர் – குஜராத்

8) ஹல்லிகர் – கர்நாடகா

9) ஹரியானா – ஹரியானா

10) காங்கேயேம் – தமிழ்நாடு

11) காங்ரெஜ் – ராஜஸ்தான்

12) கேன்கதா – உத்திரப்பிரதேசம்

13) கேரிகார்க் – உத்திரப்பிரதேசம்

14) ஹில்லார் – மகாரஷ்டிரா

15) கிருஷ்ணா வாலி – கர்நாடகா (250க்கும் குறைவாக)

16) மால்வி – ராஜஸ்தான்

17) மேவாதி – உத்திரபிரதெசம்

18)நகோரி – ராஜஸ்தான்

19)நிமாரி – மகா

20)ஓங்கோல் – ஆந்திரா

21) பொன்வார் – உத்திரபிரதேசம்

22) புங்கனூர் – ஆந்திரா , தமிழ்நாடு ( 100 க்கும் குறைவாக)

23) ரதி -ராஜஸ்தான்

24) சிவப்பு காந்தாரி – மகா, குஜராத்

25) சிவப்பு சிந்தி – பஞ்சாப்,

26) சாஹிவால் – பஞ்சாப்

27) சிறி – மேற்குவங்கம் , சிக்கிம்

28) தார்பார்க்கர் – ராஜஸ்தான்

29) உம்பளச்சேரி – தமிழ்நாடு

30) வச்சூர் – கேரளா (100 க்கும் குறைவாக)

31) கங்காத்திரி – உ.பி, பீகார்,

32) மல்நாட் ஹிடா – கர்நாடகா

33) தோ தோ – நாகாலாந்த்

ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு

ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இந்த வகையான தீவனதில் எதாவது மூன்று கண்டிப்பாக தயார் செய்வது கட்டாயம்

உலர் தீவனங்களை விட இதில் புரதம் மற்றும் தாது உப்புகளின் அளவு அதிகமாக இருக்கிறது.

பசுந்தீவனத்தை உலர் தீவனங்களுடன் சேர்த்து தரும்போது உலர்தீவனங்களின் உட்கொள்ளும் அளவு மற்றும் அவற்றின் செரிமானத் தனமை அதிகரிக்கிறது. வகைகள் -- தானிய வகை, புல் வகை, பயறுவகை, மர வகை.

தானிய வகை
---------------------
சோளம், கம்பு மற்றும் மக்காசோளம்
அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை

புல் வகை
------------------
கினியாப் புல், கம்பு நெப்பியர் ஒட்டுப்புல் ( கோ-1,கோ-2,
கோ-3 மற்றும் கோ-4), நீர்ப்புல் ( எருமைப் புல்), கொழுக்கட்டைபுல்,
ஈட்டிப்புல், மற்றும் மயில் கொண்டைப்புல்.
அதிக மாவு சத்தும் , ஒரளவு புரதமும் கொண்டவை

பயறு வகை
-------------------
வேலிமசால், குதிரை மசால், முயல் மசால், தட்டைப் பயறு.
அதிக புரதமும் சுண்ணாம்பு சத்தும் கொண்டவை.

மர வகை
---------------
அகத்தி, சூபாபுல் ( சவுண்டல் ), கிளிரிச்சிடியா, கருவேல், வெல்வேல்,
ஆச்சா மற்றும் வேம்பு
நடுத்தரமான புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.

அளிக்கும் முறை
---------------------------
பசும் புல் மற்றும் தானிய வகை தீவனப் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை
1 பங்கும் கொடுக்க வேண்டும் .

இவ்வாறு அளிக்கும்போஆடுகளுக்கு து புரதம் மற்றும் மாவு சத்துகள்
சரியான விகிதத்தில் கிடைக்கும்



ஆடு, மாடு கடிக்காத உயிர் வேலி அமைப்பது எப்படி

உயிர் வேலிக்கான கன்றுகள் எங்கு கிடைக்கும்?'' என்று குடவாசலிலிருந்து எம்.கார்த்திக் கேட்டிருக்கிறார். ஈரோடு-முத்தூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சி.சுப்பிரமணியன் பதில் தருகிறார்.

‘‘கிளுவை, கிளா, கள்ளி என்று ஒவ்வொரு பகுதிக்கும் தக்கவாறு உயிர்வேலிகள் நிறையவே இருந்தன. ஆனால், பல பகுதிகளில் இதன் பயன் தெரியாமல் கைவிட்டுவிட்டனர். விவரம் தெரியாமல் அழித்துவிட்டு, கடன் வாங்கி கம்பி வேலி போடுபவர்களும் உண்டு.

எங்கள் மாவட்டத்தில் கிளுவை மரச்செடியைத்தான் இப்போதும் கூட பரவலாக பயன்படுத்தி வருகிறோம். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதியிலும் பரவலாக இதைப் பார்க்க முடியும். சிவகங்கை உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளி வேலியை பார்க்கலாம்.

கிளுவையைப் பொறுத்தவரை குறிப்பாக மானாவாரி நிலத்தில் இது அருமையாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய நிலத்தில் வளராது. இதை நடவு செய்வதற்கு ஆடி, ஆவணி மாதங்கள் ஏற்றது. பருவமழைக் காலத்தில் நடவு செய்தால் உடனே வேர் பிடிக்கும். ஆடு, மாடுகள் கடிக்காது (வெள்ளாடு மட்டும் கடிக்கும்). மண் அரிப்பைத் தடுக்கும், நிரந்தர வேலியாகவும் இருக்கும். தூதுவளை, கோவைக்காய், சிறுகோவை போன்றவற்றை இதன் மீது படரவிட்டு, வருமானம் பார்க்கலாம்.

கம்பி வேலி, கல்வேலி என்று செலவு பிடிக்கும் சமாச்சாரங்களைக் காட்டிலும், கிளுவை போன்ற உயிர் வேலிகளே மிகச் சிறந்தவை.

கிளுவைக் குச்சிக்காக பெரிதாக அலையத்தேவையில்லை. அக்கம் பக்கத்தில் கூட விசாரித்தால் யாராவது ஒரு விவசாயி அதைக் கடைபிடித்துக்கொண்டிருப்பார். அவரிடமே கூட விதைக்குச்சிகளைக் கேட்டுப் பெறமுடியும். உங்கள் பகுதியில்தான் இருக்கிறது பட்டுக்கோட்டை. அங்கேயும் முயற்சிக்கலாம். எங்கும் கிடைக்
காத பட்சத்தில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.'' அலைபேசி 98947-55626.

நன்றி: பசுமை விகடன்

Monday, 17 November 2014

மண் வளத்தை எப்படி அதிகரிப்பது?

மண் வளத்தை எப்படி அதிகரிப்பது?
நிலத்தில் ஹியூமஸ் என்று சொல்லப்படுகின்ற இலை மட்குகளும், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் பெருகினால் மண்ணின் வளம் அதிகரிக்கும். ஹியூமஸ் பெருகுவதற்காக உயிர் மூடாக்கான தட்டைப் பயறு, முருங்கை போன்றவற்றை ஊடுபயிரகச் செய்யுங்கள். இவற்றின் மகசூல் ஒரு பக்கம் உங்களுக்கு வருமானத்தை கொடுக்கும். இந்தப் பயிர்கள், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணையும் வளப்படுத்தும். இந்த உயிர் மூடாக்கு பருவம் முடிந்தவுடன், மண்ணில் மட்கத் தொடங்கும். இவைதான் ஹியூமஸ் என்ற வடிவமாக மாறும். இந்த வடிவில் சென்றவுடன் மழையைத் துளிகூட வீணாக்காமல் சேமித்து வைக்கவும் செய்யும்.
அடுத்து, நுண்ணுயிர்களின் பெருக்கம். இதற்கு மாதம் இரண்டு தடவை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீருடன் கலந்து விடவேண்டும்.