Monday 28 October 2013

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு



இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

Saturday 26 October 2013

மாடுகளில் உண்ணிகளைத் தவிர்ப்பது எப்படி

கோடைக்காலங்களில் மாடுகளை அதிகமான அளவில் உண்ணிகள் தாக்கும். இந்த உண்ணிகள் பெரும்பாலும் மாடுகளில் அவற்றின் காதுகளின் உள்ளேயும் பால்மடிப்பகுதியில் வாலுக்கு அடியிலும், உடலின் மேற்புறத்திலும் இருக்கும். இதனாலே என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா? உண்ணி இருந்தால் நாங்கள் கையில் பிடித்து நெருப்பில் போட்டுவிடுவோம் என்று சொல்கிறீர்கள். இங்க பாருங்க!

இந்த உண்ணிங்க ரத்தத்தை குடிக்க கடிப்பதால் கொசுக்கள் மனிதர்களை கடித்து மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்புவதுபோல உண்ணிகளும் மாடுகளில் நிணநீர் கட்டிநோய் (தெய்லீரியோசிஸ்), ரத்த சிறுநீர் நோய் (பேபிசியோசிஸ்) போன்ற நோய்களை பரப்பும். இந்த தெய்லீரியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிகமான காய்ச்சல், ரத்தசோகை, தீவனம் எடுக்காமை, கண், மூக்கில் இருந்து நீர் வடிதல், மூச்சு விட சிரமப்படும். மேலும் 20 லிட்டர் கறக்கும் மாடுகூட அரை லிட்டர் பாலுக்கு வந்துவிடும். பேபிசியோசிஸ் நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் அதிக காய்ச்சல், ரத்தசோகை, சிறுநீரானது ரத்தம் போல வரும். எனவே இந்த நோய்களிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டுமென்றால் உண்ணிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதாவது உண்ணிகள் ரத்தத்தில் ஓரணு ஒட்டுண்ணி நோய்களை பரப்புவதோடு மட்டுமல்லாமல் உண்ணிகள் அதிகமாக இருந்தால் ஆடு, மாடுகள் தலையை ஆட்டிக் கொண்டும், சுவற்றில் தேய்த்துக்கொண்டும், தீவனம் உண்ணாமல் மெலிந்தும் காணப்படும். நீங்கள் சொன்ன மாதிரி உண்ணிகளை கையில் பிடித்து நெருப்பில் போடுவது, மாடு மேல் மண்ணெண்ணெய் தடவுவது போன்று செய்யாமல் பூடாக்ஸ் மருந்தை வாங்கி 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மருந்து சேர்த்து கலந்து துணியில் நனைத்து மாடுகளின் எல்லா பாகத்திலும் தேய்க்க வேண்டும். குறிப்பாக மாடுகளின் காதுகளின் உட்புறம், மடிப்பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும்.

மேலும் இந்த மருந்து கலந்த தண்ணீரை கொட்டகையினுள் தரை, சுவற்றிலும் தெளிக்க வேண்டும். ஏனெனில் உண்ணிகள் ரத்தத்தை குடித்துவிட்டு தரையில் முட்டைகளை இட இருக்கும். ஒரு உண்ணி சுமார் 18,000 முட்டைகளை இடும். ஒரு உண்ணியை விட்டாலும் அதிலிருந்து 18,000 உண்ணிகள் பெருகி கால்நடைகளில் ஏறிக்கொள்ளும். எனவே உண்ணிகளை தடுக்க மாடுகளின்மேலும் கொட்டகையின் தரை மற்றும் சுவற்றிலும் உண்ணிநீக்க மருந்தை தெளிக்க வேண்டும். (தகவல்: முனைவர் .சௌந்தரராஜன், பேராசிரியர், கால்நடை ஒட்டுண்ணியியல் துறை, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை-600 007. போன்: 044-2530 4000. விரிவு: 2042. மின்னஞ்சல் soundarvet 1970@yahoo.com.
முனைவர் தே.தியாகராஜன், பிஎச்.டி.,
சென்னை-600 051.

Friday 25 October 2013

பசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை

மாடுகளின் வயதை அதன் கீழ்த் தாடையிலுள்ள எட்டு நிரந்தர முன் வரிசைப் பற்களின் வளர்ச்சியை வைத்து கணக்கிடலாம்.

மாடுகளில் நிரந்தரப் பற்களாக் கீழ்தாடையில் 4 ஜோடி அதவாது 8 முன் வரிசைப்பற்கள் இருக்கும், மேல் தாடையில் முன் வரிசைப்பற்கள் இருக்காது.

பொதுவாக கலப்பின மாடுகளில்

2 வருட வயதில் மத்திய ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.

2 1/2 வருட வயதில் இரண்டாவது ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.

3 வருட வயதில் 3 வது ஜோடி பற்களும்

3 1/2 - 4 வருட வயதில் கடைசி ஜோடி நிரந்தர முன்வரிசைப் பற்களும் முளைத்து விடும்.

6 வருட வயதில் இருந்து இப்பற்கள் தேய ஆரம்பிக்கும்.

10 வயது ஆகும் போது எல்லா முன்பற்களுமே தேய்ந்த நிலையில் இருக்கும்.

Murrah breed of Buffalo

Murrah breed of buffalo, the pride of Haryana, is a milk type animal. The home tract of Murrah buffalo is Rohtak, Jind and Hisar districts of Haryana (India). It is also found in Nabha and Patiala districts of Punjab (India) and around Delhi .

The physical characters of Murrah


Body : Sound built, heavy and wedge shaped.
Head : Comparatively small.
Face : Comparatively long.
Neck : Comparatively long.
Body colour : Jet-black.

White markings on face and leg extremities may be there (2, 3), but are not generally preferred.

Eyes : Should not be walled i.e. the cornea should not have whiteness.

Tail : Long reaching upto fetlock joint (2, 3, and 6) with black or white switch upto (maximum) 8.0 inches (4).

Horns : Different from other breeds of buffaloes; short, tight, turning backward and upward and finally spirally curving inward. The horns should be somewhat flattened. As the age advances the horns get loosened slightly but spiral curves increases.

Limbs : Comparatively short but strong built.

Skin : Soft, smooth with scanty hairs as compared to other buffaloes.

Udder : Fully developed, drooping.

Teats : Equally distributed over the udder but hind teats are longer than fore teats.

Loin : Broader and sliding forward.

Body weight : The average body weight of males, 550 Kg and the females, 450-Kg.

Height : The average height at withers; male: 1.42 meter; female: 1.32 meter.

Age at fist calving : 3 years but we have also the buffaloes, which calved at 3 years with good milk production.

Inter-calving period : 400 to 500 days.

Lactation period : 300 days. (with minimum of ~230 days recorded under top quality Murrah)

Daily lactation in peak period : 14 to 15 litter but upto 31.5 Kg milk production had also been recorded. The elite Murrah buffalo produces above 18-litter milk per day. A peak milk yield of 31.5 kg in a day has been recorded from a champion Murrah buffalo in the All India Milk Yield Competition conducted by the Government of India.

Dry period : About three months. But less than three may be there.

Gestation period : 310 days (average)

The Murrah buffalo is good milk producer, not only in India but also probably in the world (2, 7). The bulls of this breed are extensively used to upgrade the non-descript buffalo stock.

கடக்நாத் - கருங்கோழி



கருங்கோழி என்பது உள்ளும் புறமும் எல்லா பாகங்களும் கருப்பாக இருக்கும் ஒரு கோழிவகை... இவை இந்திய மத்தியப் பிரதேச மாநிலக் காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, "கடக்நாத்' என்றழைக்கப்படும் கோழியினமாகும்... இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது... தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன... இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது... இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுத்துகின்றனர்... ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்... இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது... கொலஸ்ட்ரால், 0.73 - 1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்த கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம்... இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன... மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, தில்லி போன்ற வடமாநிலத்து மக்கள் இக்கோழிகளின் இறைச்சி, ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.. மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது... சீன நாட்டின் மருத்துவத்திலும், உணவிலும்கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.


Nativity

One such breed is the Kalamasi or Kadaknath fowl breed that is native of Bhil and Bhila tribal regions in Madhya Pradesh.

The birds are jet black in colour and reared mainly for their meat, which is also black in colour but softer than that of other desi birds.

“A survey programme conducted by the Jhabhua Krishi Vigyan Kendra some years back threw light on the alarming fact that the breed is slowly becoming extinct and only a few hundreds are left. Through the National Agriculture Innovation Project (NAIP) of the Indian Council of Agricultural Research (ICAR) under Rajamata Vijayaraje Scindia Agricultural University.

Gwalior, attempts were made to revive the breed and today nearly several hundred tribal beneficiaries are rearing this breed,” says Dr. I.S.Tomar, Programme Coordinator, Krishi Vigyan Kendra, near Rajgarh Naka, Jhabua, Madhya Pradesh. The birds are robust by nature and can tolerate extremes of climate.

They can be reared quite easily and there is no need for any special attention or round the clock care for them. They thrive well in a minimal management system and are good scavengers. As a result, feed cost gets considerably reduced. They can be housed in large bamboo baskets or inside store rooms.

Grow fast

Both the cockerels and hens grow quite fast and the hens start laying eggs from sixth month of age onwards. In a year a single hen lays 80-120 eggs.

Kadaknath birds are poor brooders. They do not hatch their eggs. Therefore the tribals use other desi hens to hatch the eggs. The desi hen is placed on the eggs kept in a bamboo basket lined with dry straw or grass to provide a cushioning effect. This traditional practice is being encouraged to propagate this breed through natural means and ensure availability of chicks in the villages.

Good price

“The birds command a good price in the market. A four month bird is sold for Rs, 600-800 and a one year old bird above Rs. 600 (other desi varities fetch Rs. 100-150).The eggs are sold at Rs.10-12.

The dark black meat is considered a delicacy by the tribals. Both the eggs and meat are a low source of fat (3-5 per cent) and high source of protein (25-40 percent),” says Dr.Tomar.

The NAIP initially started a pilot project with only 10 poultry houses each with 100 birds and named it as Kadaknath Murgi Palan Samooh Jhayda. Presently around 500 poultry units are functioning at Jhabhua with active support from Gramin vikas trust and Integrated watershed management programme in Jhansi.

“The tribal beneficiaries rearing this breed are today able to get an income of Rs.80,000-90,000 a year. This has encouraged many people to remain in their lands and continue farming operations in their fields also. In a way this bird has been able to check migration of families from their land in search of work,” says Dr. Tomar.

Hatching unit

A hatching unit has been established at a cost of Rs. 40 lakhs to increase the availability of this breed to other interested growers.

All the growers have been trained on scientific management of this breed, balanced feed, health management and marketing. Timely vaccinations have been administered by specialists and deworming at periodical intervals is also being done.

By adopting such measures they have succeeded in bringing down the mortality of the bird from 50 per cent to 10-12 per cent.

The birds attain a body weight of 1.5 kg in 105- 120 days. This sustainable system of livelihood through Kadaknath rearing has been well recognised by the district administration of Jhabua and the Kadaknath Murgi Palan Samooh Jhayda and awarded a certificate of appreciation by the district administration.


For more information readers can contact Dr. I.S. Tomar, Programme Coordinator, Krishi Vigyan Kendra, Near Rajgarh Naka, Jhabua-457661, Madhya Pradesh, phone: 07392-244367, Mobile: 09425188028

Thursday 24 October 2013

கறவை பசு வாங்க

பசுவின் திமில் நல்ல தடிமனாக நிமிர்த்து இருக்க வேண்டும்.

வாலானது தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.(வாலின் தசைப் பகுதி பின்னங்காளின் முட்டியை தாண்ட வேண்டும் )

பசுவின் நெற்றி விரிந்திருப்பது நலம்

தொப்புள் பெரியதாக இருபது நலம்.

பின்னங்கால் நல்ல இடைவெளியுடன் இருப்பது நன்று.

வயிறு நன்றாக இறங்கி இருக்க வேண்டும்.

முதுகு எலும்புகள் தெரிவது நல்லது. இது எதற்கு என்றால், பசுவானது, தான் உண்ணும் அனைத்தையும் பாலாக மாற்றிவிடும். இல்லாவிடில், உடலாக மாற்றிவிடும்.

மடிகள் பெரியதாக இருப்பது நலம்.

காம்புகலுக்கிடையில் நல்ல இடைவெளி இருத்தல் நல்லது.

பசு ஆக்ரோசமாக இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும்.

பசுவின் கண்கள் நல்ல ஒளியுடன் இருக்க வேண்டும்.

பசு நுனிப்புல் மேய கூடாது. நன்றாக தீவனம் உண்ண வேண்டும். (நுணிப் புல மேய்வது வயதான பசுக்கள் மட்டுமே..காரணம் பற்கள் தேய்ந்துவிடும்)

பற்கள் 6 அல்லது 8 கொண்டதாக இருக்க வேண்டும்.

பசுவின் தோல் மிருதுவாக இருக்க வேண்டும். நீங்கள் சிறிய குச்சி வைத்து தோலை தொடும்போது, தோல் துடிக்க வேண்டும்.

மடி நரம்புகள் நன்றாக தெரிய வேண்டும்.

பசுவின் கீழ் வயிற்றில் தொப்புளில் இருந்து ஒரு நரம்பு மாடிவரை நீண்டு செல்லும். அந்த நரம்பு நல்ல தடிமனாக பெரியதாக இருக்க வேண்டும்.

கறவை பசுவை பால் பீச்சி வாங்கலாம். பால் பீச்சும்போது, குண்டாவில் விழும் பாலின் சப்தம் 'சர் சர்' என்று நன்றாக கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால், பசு அதிக பால் தராது என்று பொருள்.

*-------**-------**-------**-------**-------**-------**-------**-------**-------**-------*

Horns should have uniform shape. one horn should not be facing one direction and other one the other side. Generally this type of cows can never be trusted.

Nostril opening should be wide open- Sign of healthy cow.

When you enter where cows are housed, they should move their ear in your directions and generally they should be moving their ear lobes in all directions, should always be alert. Sign of healthy cow. If not moving she is old, sick or too lazy.

When you approach very close to a cow, she should immediately get up in a fraction of a sec. If not she is not healthy.

She should also immediately urinate. While doing so her back bone should arch. If not she is sick (most modern cows don't arch back). Urine should fall far off from here rear legs, longer it is better. Make sure it is also not dribbling, almost one flow and a little dribble once finishing is ok.

Urine should have almost water like color not too dark - Signs of sickness. But if turmeric included in daily feed urine will have color.

Tail should almost touch ground and should be very active in swatting flies away.

Eye lash should be neatly placed.

Generally 3 round curls are found on good cows, one on center of forehead, next on the start of neck and another one on the center of back bone.

Check if they have dead skin on knees, bottom side of chest area. If very noticeable they are aged. 

Hooves should be small and in good shape. Bigger ones are sign of age. (you need to see few hooves to understand it)

Dew claws two small grips above each hooves should not be big. It should be small in size.

Teeth also give a good idea of cows and their age. Teeth should also be neatly placed.

Their chest area should be massive. Rear (hind and belly) area smaller as compared to the front.

Eyes are very attractive in good cows. Sort of 2 or 3 color combination and very bright and mesmerizing.

Muzzle area should be always moist and not dry and flaky. Saliva should also be dripping while chewing cud - sign of well feed cow.

Single color cows were preferred even during ancient times, different colors have different properties. So cows should be of single color. Udder area will have white or cream color.

All Indian cows will have slight variation of color during pregnancy and when they become healthy because of hormonal changes.

Udder should be in good shape. Front 2 nipples should be lower than the rare ones, all in consistent shape and not protruding outwards. Only the front 2 nipples should be visible when a cow is standing still from side view.

Tail start area bone should have triangular pattern.

Indian cows are generally found in 7 colors which are black, white, red, copper shade, golden and ash.

Monday 21 October 2013

மருந்தாகும் உணவு வகைகள்




கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். 



1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! 


2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

Sunday 20 October 2013

சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்து எனது நிலம் கெட்டு விட்டது. அதை மீண்டும் வளமாக்க முடியுமா?'


கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தைச் சேர்ந்த நாராயணசாமி பதில் சொல்கிறார்.


''சாயப்பட்டறை கழிவு நீர் பாய்ந்த பகுதியில் புல், பூண்டுகூட முளைக்காது. அந்த அளவுக்கு கழிவு நீரில் ரசாயனங்கள் கலந்துள்ளன. மண்ணில் கலந்துவிட்ட ரசாயனத்தை அகற்றும் சக்தி... வெட்டிவேர் என்கிற பயிருக்கு உண்டு. வெட்டிவேரை சாகுபடி செய்தால், வயலில் உள்ள ரசாயனங்களை உறிஞ்சிவிடும். கூடவே சூபா புல்லையும் வளர்க்கலாம். வெட்டி வேர்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானமும் கிடைக்கும். ஒரு முறை பயிர் செய்தால், பத்து ஆண்டுகள் வரை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். ஏக்கருக்கு ஒரு டன் வெட்டிவேர் மகசூல் கிடைக்கும். இன்றைய சந்தை நிலவரப்படி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெட்டிவேர் சாகுபடி செய்த இரண்டு ஆண்டுகளில் நிலம் வளமானதாக மாறிவிடும். அதன் பிறகு மரப்பயிர்களை சாகுபடி செய்யலாம். மரப்பயிருடன் ஊடுபயிராக வெட்டிவேரை சாகுபடி செய்வது, மேலும் நிலத்தை வளமாக்குவதற்கு உதவும். ஒரு கட்டத்தில் காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்யும் அளவுக்கு நிலம் மிகமிக வளமானதாக மாறிவிடும்.''

தொடர்புக்கு, செல்போன்: 94433-84746.

Wednesday 16 October 2013

மாட்டின் நிறத்தைப் பொறுத்தும் பாலின் பண்பு அமைகிறதாம்

சிவப்பு நிறம் உடைய பசுவின் பால் வாத ரோகத்தைப் போக்கும் . 

வெள்ளை நிறம் உடைய பசுவின் பால் பித்த ரோகத்தைப் போக்கும் . 

கபிலை நிறம் ( வெள்ளைப்புள்ளியும் கருஞ்சிவப்புபு நிறம் ) உள்ள பசுவின் பால் மூன்று ரோகங்களையும் நீக்குமாம் .

LAND MEASUREMENT : நில அளவுகள்

நில அளவுகள்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்


1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )


1 ஏக்கர் = 43560 சதுர அடி


1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)


1 சதுர மீட்டர் (Square Meter) = 1.190 குழி


1 குழி = 9 சதுர அடி


1 சதுர மீட்டர் (Square Meter) = 10.76 சதுர அடி


1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்


1 குந்தா (Guntha) = 33 அடி *33 அடி = 1089 சதுர அடி

கால்நடைகளில் மரபுவழி மருத்துவம்

தமிழர்கள் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். பசுவை செல்வத்தின் சின்னமாகவும் உற்பத்தியின் அடையாளமாகவும் வழிபடுதல் தமிழர்களின் வாழ்வியல் வழியாகும்.

மனிதன் பிறந்தது முதல் அவனுக்குப் பால் புகட்டப்படுகிறது. இறந்த பிறகும் எரித்த அல்லது புதைத்த இடத்தில் பால் ஊற்றப்படுகிறது. வாழ்விலும் சாவிலும் இணைபிரியாதது பால். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லா நேரங்களிலும் உண்ணப்படுகின்றன.

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பசு சாஸ்திரம், பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல கஜ சாஸ்திரம், அஸ்வ சாஸ்திரம் முதலான பல நூல்களில், அவற்றின் மரபுவழி சிகிச்சைக்காக என்னென்ன மூலிகைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாகப் பதிப்பித்து வைத்துள்ளார்கள்.

கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களில் சுமார் 70 சதவீதத்தினர் கால்நடைகளின் துணைப் பொருள்களைக் கொண்டே வாழ்க்கை நடத்துகின்றனர். உலகக் கால்நடையில் 20 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளது.

இன்றைக்கும் கிராமங்களில் பசு, கன்று ஈன்றவுடன் இளம் மூங்கில் தழைகளைத் தின்னக் கொடுப்பார்கள். அந்தத் தழைகளைத் தின்ற 3 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி கருப்பைப்பிடிப்பிலிருந்து தொடர்பை விலக்கி விட்டுவிடும். உடனே அப்படியே எடுத்துவந்து முருங்கை மரத்தின் அடியில் புதைத்து அதையும் உரமாக்கிவிடுவார்கள். ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உதவும்.

வயலில் நெல் அறுக்கின்றபோது ஒரு பழமொழி சொல்வார்கள், ""நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு'' என்று. மாட்டுக்கு வைக்கோல் இடுவதைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். மாட்டின் கழிவு சாணம், மீன்களுக்கு உணவாகப் போடப்படுகிறது. மீன் மனிதனுக்கு உணவாகிறது. மனிதக் கழிவு மண்ணுக்கு உரமாகிறது.

உயிர்ச்சங்கிலியின் ஒவ்வொரு தொடர்பும் இயற்கையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலவழி மருத்துவப் படையெடுப்பால் மரபுவழி மூலிகை மருத்துவம் வழக்கொழிந்து போனது. தஞ்சையில் இயங்கிவரும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கால்நடை மருத்துவ மூலிகைகளை உழவர் பயிற்சிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள், பயன்பாட்டுக்குக் கொண்டுவருகிறார்கள். கிராம கால்நடைக் காப்பாளர்களுக்கு தொடர்ந்து பத்தாண்டுகளாக மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆண்டுகள்தோறும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெறுகின்றன.

கால்நடைகளில் கோமாரி நோயைக் குணப்படுத்த தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில் செலவிடுகிறது. இன்றும் கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் இல்லாத கிராமங்களில், ஒரு முற்றிய தேங்காய்த் துருவலோடு மஞ்சளையும் வேப்பிலையையும் சம அளவு அரைத்துக் கொடுத்து குணப்படுத்துகிறார்கள்.

சினைக்கு வராத மாடுகளுக்கு தொடர்ந்து ஒரு மாதம் சோற்றுக்கற்றாழை மடல்களைக் கொடுத்து பருவமடைய வைக்கின்றனர். மாடுகளின் மலட்டுத்தன்மையை நீக்க, ஆனை நெருஞ்சி தழைகளைக் கொடுத்து குணப்படுத்துகின்றனர். கால்நடைகளின் சுவாசக் கோளாறுகளுக்கு ஆடாதொடை இலைகளையும் ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி தழைகளையும் தூதுவளைத் தழைகளையும் பயன்படுத்துகின்றனர்.

கால்நடைகளின் கழிச்சல் நோய் குணமாக கொய்யா மரத்தின் இலைகளைக் கொடுத்தும் மாதுளம் பிஞ்சுகளைக் கொடுத்தும் குணப்படுத்துகின்றனர்.

செரிமானக் கோளாறுகளுக்கு இஞ்சி, உப்பு அல்லது சுக்கு, பிரண்டை பயன்படுத்துகின்றனர். காயங்களை ஆற்றுவதற்கு குப்பைமேனி, திருநீற்றுப்பச்சிலைகளைக் கசக்கித் தடவுகின்றனர்.

ஆடுகளைப் பற்றிய ஒட்டுண்ணிகளை விரட்டத் தும்பைச் செடிகளைப் பயன்படுத்துகின்றனர். காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்புப் பொடியைக் கொடுக்கின்றனர். வேம்பும் மஞ்சளும் கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தோல் நோய்களுக்கு மருதாணி இலைகளை அரைத்துத் தடவுகின்றனர்.

விஷக்கடிகளுக்கு அருகம்புல் சாற்றைக் கொடுக்கின்றனர்.

மாடுகளுக்கு மடிநோய் கண்டால் மரபுவழி மருத்துவத்தைக் கடைப்பிடித்தால் ஒராண்டுக்கு சுமார் 3 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். இப்போது ஆங்கில மருத்துவத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி ஒரு வாரத்தில் குணப்படுத்துகிறார்கள். ஆனால் மடியில் செலுத்தப்படும் நஞ்சு, 3 வாரங்களுக்கு கறக்கப்படும் பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்தப் பாலை குடிக்கிறவர்களுக்கு - குறிப்பாக - குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. பல வீரியமிக்க மருந்துகள் கால்நடைகளின் உடலிலேயே தங்கிவிடுகின்றன.

2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட உணவுப்பொருள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கால்நடைகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களான பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் மருந்துப் பொருள்களின் எச்சம் கலப்பது குற்றமாகும். கால்நடைகளுக்கு ஆன்டிபயாடிக் ஊசி போட்டால் அதன் பாலை குறைந்தபட்சம் 21 நாள்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.

இப்போது ரசாயன உரங்களின்றி பூச்சி மருந்துகள் அடிக்கப்படாமல் வளர்க்கப்படும் பசுந்தீவனங்களையும் பசுந்தீவனப் புல்லையும் கொடுத்து பராமரிக்கப்படும் பசுவின் பால் லிட்டருக்கு ரூ.40 என விற்கப்படுகிறது. இயற்கை உணவுக்கு எப்போதும் பற்றாக்குறை உள்ளது.

1967-ஆம் ஆண்டு தி.மு.க. முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது ஒரு கால்நடை மருத்துவமனைப் பெருவிழாவில் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை பங்கேற்றார். ""நம் நாட்டு வேளாண்குடிமக்கள் மிகவும் ஏழைகள். அவர்கள் கால்நடை வளர்ப்பதை தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கால்நடைகளைப் பராமரித்து வருகிறவர்கள். அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே கிடைக்கும் சித்த, ஆயுர்வேத மருத்துவ மூலிகைகளைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்த நீங்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

அப்போது கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநராக இருந்த டாக்டர் மந்திரமூர்த்தி, டாக்டர் எஃப்.டி. வில்சன் முதலானோர் தனியாக ஆணை பிறப்பித்து, அரசு கால்நடை மருத்துவமனைகளில் சுக்கு, சீரகம், மஞ்சள், அதிமதுரம் முதலான மருந்துகளை வாங்கிவந்து அன்றாடம் பயன்படுத்தவைத்தார்கள். மரபுவழி மருத்துவத்தைக் கெüரவக் குறைவு என்று கருதியோ என்னவோ கால்நடை மருத்துவர்கள் பிறகு கைவிட்டுவிட்டார்கள்.

ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம் சித்த மருத்துவர்

கழிசலுக்கு கத்திரி... சளிக்கு கண்டங்கத்திரி!

''ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனா, மெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும்.

வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம அளவு எடுத்து அரைச்சி, நெல்லிக்காய் அளவு கொடுத்தா... வாய்ப்புண் ஆறிடும்.

காய்ச்சல் வந்த ஆடுகளுக்கு, 3 சின்ன வெங்காயம், 5 மிளகு, ஒரு வெற்றிலையை ஒண்ணா வெச்சு கொடுத்தா... சரியாகிடும்.

50 மில்லி நெய்யை மூணு நாளைக்குக் கொடுத்துட்டு வந்தா... தொண்டை அடைப்பான் சரியாகிடும்.

கொழிஞ்சியை அரைச்சி ஒரு கொய்யாப்பழ அளவுக்குக் கொடுத்தா... விஷக்கடி சரியாகிடும்.
ஆடுகளுக்கு வர்ற பெரிய பிரச்னை கழிச்சல். இதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். 5 கத்திரிக்காயைச் சுட்டு தின்னக் கொடுத்தா போதும். கழிசல் காணாம போயிடும்.

கண்டங்கத்திரிப் பழத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வெள்ளாட்டுக் கோமியத்துல 24 மணி நேரம் ஊறவெச்சு, சாறு எடுத்து, மூணு சொட்டு மூக்குல விட்டா மூக்கடைப்பு, சளி எல்லாம் சரியாகிடும்.

சீதாப்பழ மர இலையை ஆடுக மேல தேய்ச்சி விட்டா பேன் எல்லாம் ஓடிடும்.

ஜீரண கோளாறு வந்தா, 300 மில்லி தேங்காய் எண்ணெய் கொடுத்தா சரியாகிடும். நல்லெண்ணெயும், மஞ்சளும் கலந்து தடவுனா கழலை போயிடும்'' என்று வரிசையாக பட்டியலிட்டுவிட்டு,

''ஆடுகளுக்குத் தேவையான கை வைத்தியத்தைத் தெரிஞ்சு வெச்சுகிட்டா... அவசரத்துக்கு டாக்டரைத் தேடி அலையாம, நீங்களே ஆடுகள காப்பாத்திடலாம்'' என்று நம்பிக்கையூட்டினார்.

நன்றி: சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்

சினை மாடுகள் பராமரிப்பு

சினை மாடுகள் பராமரிப்பு என்பது மாடுகளின் சினைத்தருண அறிகுறிகளைக் கண்டு செயற்கைமுறை கருவூட்டல் செய்வதில்இருந்தே ஆரம்பமாகிறது.

சினையை உறுதிசெய்து கொள்ளும் முறைகள்:

ஆசனவாயினுள் கையை செலுத்தி கருப்பையைப் பரிசோதனை செய்து உறுதி செய்தல்; ரத்தத்தில் அல்லது பாலில் உள்ள கணநீரான புரொஜஸ்டிரானை அறிவதன் மூலம் உறுதி செய்தல்; லேப்பராஸ்கோப் என்ற கருவியின் மூலம் உறுதிசெய்தல்; ஸ்கேன் மூலமாகவும் சினை உறுதி செய்தல்; சினை மாடுகளுக்கு கருவில் வளர்கின்ற கன்றின் வளர்ச்சிக்காக ஏழுமாத சினை முதல் உடல் பராமரிப்பும் பால் கொடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு கொடுக்கப்படும் தீவனக் கலவையுடன் 1 - ஒன்றரை கி.கிராம் தீவனமும் அதிகமாக கொடுத்தல் வேண்டும். சினையுற்ற மாடுகள் 7 மாதச்சினை வரை பால் கறப்பதால், சரியான, போதுமான தீவனம் அளிக்கப்பட வேண்டும். இப்பொழுது கருவளர்ச்சி மெதுவாகவே இருப்பதால் கருவளர்ச்சிக்காக அதிகமாகத் தீவனமும் தேவைப்படுவதில்லை. ஆனால் பால் வற்றியபின் கன்று ஈனும் வரை உள்ள இரண்டு அரை மாதச் சினைக் காலத்தில்தான் கரு வேகமாக வளர்கின்றது. ஏறக்குறைய மொத்த வளர்ச்சியில் 80 சதவீத வளர்ச்சி கடைசி இரண்டரை மாதத்தில் தான் நடைபெறு கின்றது. ஆதலின் கரு வளர்ச்சிக்கு அதிகமாக தீவனம் தேவைப்படுகின்றது. மேலும் அது முந்தைய கறவையில் இழந்த உடல் திசுக்களை புதுப்பித்துக் கொள்ள உதவுவதோடு கிடேரிகளில் எலும்பு வளர்ச்சி மாற்றத்திற்கும் இது மிகவும் அவசியமாகும்.

அவரையினத் தீவனம் இரண்டு பங்கு, புல்லினத் தீவனம் மூன்று பங்கு என்ற விகதத்தில் கலந்து மாடு தின்னும் அளவு அல்லது குறைந்தது நாளைக்கு ஒரு மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனம் அளிப்பதோடு அடர் தீவனத்தையும் அளிக்க வேண்டும். கடைசி 10 நாட்களில் கொடுக்கும் தீவனம் மலமிளக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒன்றரை கிலோ கோதுமைத்தவிடு கொடுப்பது நல்லது. அதிக கொள்ளளவு கொண்ட நார் தீவனங்களை அதிகமாகக் கொடுக்கக்கூடாது. குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுப்பது நல்லது. கன்று ஈனுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித்தூள் ஆகியவற்றை முக்கால் லிட்டர் தண்ணீரில் கலந்து உள்ளுக்குக் கொடுப்பது நல்லது.

சினை மாடுகளுக்குத் தேவைப்படும் சிறப்பான கவனிப்புகள்:

சினை ஊசி போட்ட நாளுடன் 280 நாளைக் கூட்டியோ அல்லது அட்டவணையைக் கொண்டோ தோராயமாக கன்று ஈனும் நாளை கண்டு அறிதல் வேண்டும். கன்று ஈனும் காலம் நெருங்கும்போது, சினை மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து பிரித்து தனியாகத் தூய்மையான காற்றோட்டமான, நல்ல வைக்கோல் பரப்பப்பட்ட கொட்டகையில் கட்டவேண்டும். பெரிய பண்ணையில் 12 ச.மீ. இடம் கொண்ட ஈனுதல் அறைகளைத் தனியாக கட்டி இதற்காகப் பயன்படுத்தலாம். தரையில் வைக்கோல் பரப்பி சினை மாட்டிற்கும் கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் அமைக்க வேண்டும். கருச்சிதைவு ஏற்பட்ட மாடுகளோடு கலவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாடுகள் அதிக தூரம் நடப்பதும் விரட்டப்படுவதும் பயமுறுத்தப் படுவதும், மேடு பள்ளம் நிறைந்த பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புதலும் தவிர்க்கப்படல் வேண்டும். சினை மாடுகள் மேய்ச்சலுக்கு மேடு பள்ளத்தில் அனுப்பினால் கர்ப்பப்பை சுழற்சி ஏற்படும். சமமான மேய்ச்சல் பகுதியில் மேய்தலே போதுமான உடற் பயிற்சியை அளிக்கும். தனியாக கடுமையான உடற்பயிற்சி தேவையில்லை.

அதிக வெப்பம், அதிக குளிர் இவைகளிலிருந்து சினை மாடுகள் காக்கப்பட வேண்டும். கடைசி இரண்டு மாதங்களில் மாட்டின் எடை 60-80 கிலோ கூடி விலா எலும்புகள் தெரியா வண்ணம் இருக்க வேண்டும். கடைசி இரண்டு மாதங்களில் கலப்பினத் தீவனக் கலவையோடு தாது உப்புக் கலவையையும் சேர்த்து அளிக்க வேண்டும். மாடுகள் 7 மாதச்சினை காலம் நிறைவுற்ற பின்னும் தொடர்ந்து பால் கரந்து கொண்டிருக்குமானால் அவற்றின் கறவை நேரத்தைத் தள்ளிப்போடுதல், தீவனம், தண்ணீர் இவற்றைக் குறைத்தல் போன்றவைகளைக் கையாண்டு கறவையை வற்றச் செய்வது அவசியம். முந்தைய ஈற்றின்போது பால்ச்சுரம் வந்த மாடுகளுக்கு அவற்றைத் தடுக்கும் நோக்கில் கடைசி காலச்சினையில் கால்சியம் ஊசிகளை போடக்கூடாது.