Monday, 14 October 2013

நோய்களை விரட்டும் கீரை வகைகள்




முருங்கைக் கீரை: இதை நெய்யில் பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்களுக்கு வாலிபமும் , வீரியமும், தாது விருத்தியும் உண்டாகும் இதை உணவில் 40 நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கையில் இன்பம் உண்டாகும். மேலும் இரத்த சோகையை தடுக்கும், இரத்த விருத்தியை உண்டாக்கும்.





அரைக்கீரை: இதை சாப்பிட்டுவர பித்தம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இரத்த பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்த வல்லது.



சிறுகீரை: சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும் உடையது. குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் போகும்.


முளைக்கீரை: முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு,வயிற்றுப்புண் சரியாகும்.





பொன்னாங்கண்ணிக் கீரை: பொன்னைக் காடுத்து, பொன்னாங்கண்ணி வாங்குஎன்று பழமொழி உண்டு. இக்கீரை கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணமாக்க வல்லது. இக்கீரையை வெண்ணெய் சர்த்து உண்ண கண் சம்பந்தப்பட்ட 96 வியாதிகள் நீங்கும் இக்கீரையை உண்பதால் வாய்ப்புண், வாய் நாற்றம், ஈரல் நோய், மூலச்சூடு, கை கால் எரிவு, உலர்த்து மேகம், வள்ளை வயிற்றெரிச்சல், வாத தோடம், தேகச்சூடு முதலிய வியாதிகள் நீங்கும். 

No comments:

Post a Comment