Wednesday 9 October 2013

பர்கூர் மலை இன மாடுகள்

பர்கூர் இன மலை மாடுகளை, அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. உம்பளாச்சேரி, ஜெர்சி, கலப்பின ஜெர்சி, பீரிசியன், கலப்பின பீரிசியன், காங்கேயம் இனம் மற்றும் முர்ரா என, பல இன மாடுகள் உள்ளன. இவற்றில் காங்கேயம் இன காளைகளுக்கு தனி மவுசு உண்டு. இந்த ரக மாடுகள், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிகளவு வளர்க்கப்படுகின்றன.

செம்மறை:இந்த இன காளைகளுக்கு இணையாக, பர்கூர் இன மாடுகள் உள்ளன. இவ்வகை மாடுகள் பர்கூர் மலை பகுதியில், அதிகம் உள்ளன. இந்த இன மாடுகள், பட்டிமாடு, செம்மறை என, அழைக்கப்படுகிறது.இவை, சிவப்பு நிறத்தில், வெள்ளை திட்டுக்களுடன் காணப்படும். இவற்றின் கண்கள், மூக்கு மற்றும் குளம்புகள் வெளீர் சிவப்பு நிறத்தில் இருக்கும். நடுத்தர உருவம், பயந்த சுபாவம், மிரட்சி அடையும் குணம் கொண்டவை.

மலைப்பாங்கான பகுதியில் கடும் வேலைக்காகவும், பாரம் ஏற்றும் வண்டிகளிலும், இவை பயன்படுத்தப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள இவ்வினம் பர்கூரில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்த இன மாடுகளை பாதுகாக்காததால், அழிந்து வருகிறது.

மேய்ச்சலுக்கு பாஸ்பர்கூர் இன மலை மாடுகள் வளர்ப்போர் சங்கச் செயலர், சிவசேனாபதி கூறியதாவது:தமிழகத்தில், காங்கேயம் இன காளைகளுக்கு அடுத்த படியாக அங்கீகரிக்கப்பட்ட மாடுகள், பர்கூர் மலை இன மாடுகளாகும். பர்கூரில் உள்ள லிங்காயத்கார் சமூக மக்கள் மற்றும் மழைவாழ் மக்கள், அதிகமாக இந்த இன மாடுகளை வளர்க்கின்றனர்.இம்மாடுகள் வனம் சார்ந்த இடங்களில் அதிகம் மேயும். இதற்காக வன சரகத்தில் அரசு அனுமதி பெற வேண்டும். அனுமதியை மேய்ச்சல் பாஸ், பட்டிபாஸ் என, இரு வகைகளில் வனத் துறை வழங்கி வருகிறது.

பர்கூர் பகுதியில் இவ்வின மாடுகள், 4,000 மட்டுமே உள்ளன. சந்தன கடத்தல் வீரப்பன் பிரச்னையின் போது, வனப் பகுதியில் இவ்வகை மாடுகளை மேய்க்க, கடும் கட்டுப்பாடு இருந்தது. மேய்ச்சலுக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டது. வறட்சியால், வனப் பகுதியில் மாடுகளை மேய்க்கப் போதிய தீவனம் இல்லை. வெயில் காலங்களில் புல் வகைகள் வெயிலில் கருகி தீப்பிடித்து விடும். மாடுகளை வனப் பகுதியில் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தினால், இயற்கையாக பூமிக்கு கிடைக்கும் சாணம், கோமியம் ஆகியவை அழிவில் இருந்து காத்து வரும்.

No comments:

Post a Comment