Wednesday, 9 October 2013

ஆட்டு கொட்டிலில் தேங்காய் நார்:

A farmer used coir pith as a floor material for a goat farm and he got a good nitrogen rich urine based manure also.
  
ஆட்டின் கழிவில் இருந்து வெளியேறும் அம்மோனியா வாயு அதன் வளர்ச்சியை பாதிக்கிறது . அதற்கு தீர்வாக கால்நடை மருத்துவர்கள் கொட்டில் முறையில் ஆடு வளர்க்க பரிந்துரைத்தனர் .கொட்டில் முறையில் கழிவுகள் கீழே விழுந்து விடுவதாலும் நல்ல காற்றோட்டதினாலும் ஆடுகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது .

ஆடுகளுக்கு தீவனம் அங்கேயே இடப்படுவதாலும் மேலும் மேய்ச்சளினால் அலைவது குறைவாக உள்ளதாலும் எடை அதிகரிக்கிறது .

ஆனால் கொட்டில் முறை வளர்ப்பில் நிறைய முதலீடு தேவை .

ஒரு விவசாயி பின்பற்றிய ஒரு வழிமுறையை முன் வைக்கிறேன் ( இதில் சில demerits உள்ளது , அதற்கான தீர்வையும் பார்க்கலாம் )

  1. coir pith ( தேங்காய் நாரின் மிச்சம் ) நிறைய வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்
  2. எளிதான ஒரு கூரை கொட்டிலை அமைத்துக்கொள்ளுங்கள் .
  3. அதன் தரையில் coir பித்தை பரப்பி விடுங்கள.
  4. அதில் ஆடுகளை வளருங்கள் 
    • coir pith ஈரத்தை உறுஞ்சி விடும் , சில நாட்களுக்கு ஒரு அதை முறை புரட்டி போடுங்கள்.
    • முழுதும் ஈரமாகி விட்டால் கூரை கொட்டிலை பிரித்து அருகில் காய்ந்த நிலத்தில் கொட்டாயிட்டு அதில் புது coir pith ஐ பரப்பி ஆடுகளை விடுங்கள் .
    • அது முழுதும் நனைந்த பிறகு பழைய இடம் காய்ந்து இருக்கும் , அதில் கொட்டிலை இடுங்கள் 
இந்த முறையின் பயன்கள் :
  1. முதலீடு குறைவு 
  2. இந்த முறையிலும் ஆட்டு மூத்திரம் முழுதும் உறிஞ்ச பட்டு விடும் 
  3. ஆட்டு மூத்திரம் மற்றும் புழுக்கை கலந்த coir பித் முதல் தர உரம் , அதிக விலை போகும் 
இந்த முறையில் வளர்க்க படும் ஆடுகள் மெத்தென இருக்கும் தேங்காய் நார்களின் மேல் நடப்பதால் குழம்புகள் வளைந்து காணப்படுகின்றது , எனவே அவற்றை சில மணி நேரங்களாவது மேய்ச்சலுக்கு இட்டு செல்லலாம்

No comments:

Post a Comment