திருவாவினன்குடி அறுபடை வீடு தண்டாயுதபானி திருத்தலம் விளக்கம்.
ஒரு வேலையை ஒழுங்கா செய்யாதவரை பார்த்து மாடு மேய்க்கத் தான் நீ லாயக்கு என்று கூறுவார்கள்.. இதன் கருத்தை ஆளமாக பார்த்தோமேயானால் நம் முன்னொர் அனைவரும் மாடுகளுடனேயே அதிகமான நேரத்தை செலவிட்டு அறிவை வளர்த்துக் கொண்டனர்.
அறிவில்லாத ஒருவன் அறிவு ஜீவியாகியா நம் நாட்டு பசுக்களுடன் பழகி வருகையில் அவருக்கு அறிவு மிகும் என்பதே உணமையான பொருள்..
தா இல் கொள்கை மடந்தையொடு, சில் நாள், 175
ஆவினன்குடி அசைதலும் உரியன். அதாஅன்று,
தாரகாசூரன் என்னும் அசுரன் இன்றைய தாரபுரத்தில் இருந்து கொண்டு தேவர்களையும் மக்களையும் பெருங்கொடுமை செய்து வந்தான்.
இவனை அழிக்க சிவனுக்கும் பார்வதிக்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே முடியும்.அந்த குழந்தை பற்று அற்றவனாக,ஞானத்தால் உயர்ந்தவனாக் இருக்க வேண்டும்.
நாரதரின் திருவிளையாட்டால் கனிக்காக பெற்றோரிடத்திலே கோபித்துக் கொண்டு திருவாவினங்குடி வந்தடைந்தார் நம் முருகப்பெருமான் .
இங்கு தான் இத்தலத்தின் நோக்கம் பற்றி நாம் பார்க்க வேண்டும்.
திருவாவினன்குடி = திரு + ஆவின்(பசுவின்) + குடி (வீடு). பசுக்கள் குடியிருக்கும் வீடு அல்லது இடம்.
தேவர்களை பசுக்களாக பூலோகத்திற்கு வரவழைத்து அதனை வெறும் மூங்கில் குச்சி கொண்டு மேய்த்து, காத்து,பழகி,படித்து அதனுடைய பாலை மற்றும் பஞ்சாமிர்தம் மட்டுமே ஒரு வேளை உணவாக அருந்தி பாசுபதம் விரதம் கடைபிடித்து வந்தார் தண்டாயுதபானி .
தண்டாயுதபானி = தண்டம் + ஆயுதபானி = மூங்கில் குச்சி மட்டுமே மாடு மேய்க்க ஆயுதமாக வைத்துக் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார் முருகன்.
தண்டாயுதபானிக்கு அசுரனை வெள்ளும் சக்தி பசுக்களை மேய்ததால் மட்டுமே கிடைத்தது.பசுவின் பாலை மட்டுமே குடித்ததால் அந்த அறிவு,தைரியம் வளர்ந்தது
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம பரசூர
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தெவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோஹர
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூர
ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளதில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி
ஆதி அந்தவுலாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே
- அருணகிரிநாதர்.
No comments:
Post a Comment